அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறதா? நடிகர் கார்த்திக் சொன்ன நச் பதில்
மதுரை: அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கார்த்திக், யார் வந்ததற்கு அப்புறம் என்று சொல்ல முடியாது. அதனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று பேசினார்.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மனித உரிமை காக்கும் கட்சி தலைவரும், நடிகருமான நவரச நாயகன் கார்த்தி நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள், அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது:-
யார் வந்ததற்கு அப்புறம் என்று சொல்ல முடியாது. மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். அதனை விலை கொடுத்து வாங்க முடியாது என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. அதனை ஒரு ஆரோக்கியமாக பயன்படுத்தி செய்தார்கள் என்றால் ஓகே.. அந்த மாதிரி வளர்ச்சி நிக்காது. உரம் இருக்கனும்.. மண் இருக்கனும்.. அதை சார்ந்து வரும் பயிராக இருக்கட்டும்.
பணம் இருந்தால் போதாது: நாடு செழித்து இருக்க வேண்டும் என்றால் அது இருக்கனும்.., பணம் இருந்தால் பத்தாது இங்க. மனம் இருக்க வேண்டும். பழைய பாட்டு தான் நியாபகத்துக்கு வருது.. புத்தி உள்ள மனிதர்கள் எல்லாம் வெற்றி காண முடியாது. வெற்றி கண்ட மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்ல. இன்னும் வெற்றியே பெறல.. மக்கள் தீர்ப்பு இருக்கு..
அது வந்து ஒரு.. சும்மா ஒரு டாட் என்று நினைக்க கூடாது. சில சமயம் அது ஒரு நாமம் மாதிரியும் வரும்.. அந்த டாட் என்பது புல் ஸ்டாப்.. அநீதி.. நாமம் என்பது தேசத்தை ஏமாற்ற நினைக்கிறவங்க.. இவ்வாறு அவர் கூறினார்.
விஜயபிரபாகரன், ராதிகா: தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்திக் கூறியதாவது:- "என்னுடைய மூத்த சகோதரர் மகன் வரட்டும். இதேபோல் எனது நண்பர் தான் சரத்குமார். ராதிகாவும் எனக்கு தெரிந்தவர் தான். அவர்களும் வரட்டும். மக்கள் தான் முடிவு செய்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
விஜய் வர வேண்டும்: தொடந்து நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து கார்த்திக் பேசியதாவது:- "விஜய் வரட்டும். கண்டிப்பாக வரவேண்டும். கரெக்டான, சரியான வயதில் வருகிறார். நல்ல ஒரு ஆரோக்கியமான விஷயம். பீக்ல இருக்கும் போதே வருகிறார் என்பது ரொம்ப பெரிய விஷயம். முழு நேரமும் அரசியல்வாதியாக வருகிறார். அண்ணனாக எனது ஆசை என்னவென்றால், அவர் தொடர்ந்து நடிக்கவும் வேண்டும்" என்றார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications