Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை..ஹைகோர்ட் மதுரைக் கிளை அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் மீது ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட அனைத்தும் முற்றிலும் தவறானது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

HC Madurai Branch order to TN govt dont use Ex minister C.Vijayabaskars name Arumugasami Commission reports

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ஆம் முதல் விசாரணையைத் தொடங்கியது.

ஆட்சி மாறிய பின்னரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நீடித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயரை சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார்

HC Madurai Branch order to TN govt dont use Ex minister C.Vijayabaskars name Arumugasami Commission reports

இந்த வழக்கு விசாரணையின்போது, அவர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் மீது ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட அனைத்தும் முற்றிலும் தவறானது. சட்டவிதிக்கு எதிரானது

ஆறுமுகசாமி ஆணையத்தால் சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது ஆணையம் குற்றம் சுமத்தியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது

எனவே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தால் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்திற்கும் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+