விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! -
மதுரை: வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே திருமண வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களும் நோய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் மறைத்து வேறு வகையில் குறிப்பிட வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கணவன், மனைவி விவாகரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் சகிப்புத்தன்மை இன்மையும், திருமண உறவு முறிவு போன்றவை அதிகரிக்கிறது. தனிக்குடும்பம் என்ற கருத்தாக்கம் சிதைந்து வருவது திருமண வாழ்க்கை சீராகச் செல்வதற்கு பெரும் தடையாக உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அன்றாட வாழ்வில் மனஅழுத்தம் வெளிப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவிக்கு இடையே பகிரப்படும் அன்பு, உணர்வுப்பூர்வமான நெருக்கம் மற்றும் அந்தரங்கமான உறவு ஆகியவை மனித உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடுகளாகும். இவை வாழ்க்கையில் ஆழ்ந்த மன அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கின்றன. இத்தகைய தோழமை, உணர்வுப்பூர்வமான விரக்தி அல்லது உளவியல் ரீதியான துன்பத்துடன் போராடுவோரின் உயிர் காக்கும் ஆதரவாக மாறுகிறது.
மனநோய் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய திருமண வழக்குகள் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது சமூகத்திற்கு ஒரு சாபக்கேடாக அமையும். இதை தவிர்க்க வேண்டும்.
இதனால் வழக்கின் தீர்ப்புகள், உத்தரவுகள், மனுக்கள் அல்லது கோர்ட்டு பதிவேடுகளில் வழக்கில் தொடர்புடையவர்களை X மற்றும் Y என்றோ அல்லது வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடையாளம் மறைக்கப்பட்ட பிற பெயர்களில்தான் விவரிக்கப்பட வேண்டும்.
எனவே திருமண வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களும் கடுமையான மனநல கோளாறுகள் மற்றும் மனநோய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் மறைத்து வேறு வகையில் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
-
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications