இப்பலாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பது ஃபேஷனா போச்சு! திருச்சி சூர்யா சிவா மனுவை டிஸ்மிஸ் செய்த ஐகோர்ட்!
மதுரை: பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா மனுவை தள்ளுபடி செய்துள்ளது ஐகோர்ட் கிளை. போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது இப்போதெல்லாம் ஃபேஷனாக மாறிவிட்டது என ஐகோர்ட் கிளை நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிபதி சொன்ன கருத்து: இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது" என கருத்து தெரிவித்து, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திருச்சி சூர்யா சிவா: திமுக முன்னணி தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் தனக்கும் தனது தந்தைக்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு திமுகவில் இருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த சூர்யா சிவா, அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டார். மிக விரைவாகவே பாஜகவில் வளர்ந்து வந்த அவருக்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சிக்கும் திருச்சி சிவாவுக்கும் இடையே சிறுபான்மை அணியில் பதவி வழங்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.
ஆடியோ விவகாரம்: சூர்யா சிவா, டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் பின்னர் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, தான் பாஜகவில் இருந்து விலகுவதாகக் கூறி, பாஜகவினரை விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது முதல் சூர்யா சிவா எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் சூர்யா.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம், திருச்சி சூர்யா சிவா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. அப்போது, பாஜகவில் திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். திருச்சி சூர்யா சிவா மீதான புகாரில் பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா தான் வகித்துவந்த பதவியில் மீண்டும் தொடர்வார் என அண்ணாமலை அறிவித்தார்.
குற்ற வழக்குகள்: திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி பகுதியில் தனியார் பள்ளி இடத்தை தராமலும், வாடகை தராமலும் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"வெறுப்புல கருப்பு படம் பார்க்கல!".. பிறகு நடந்த அதிசயம்.. மனம் திறந்த நடிகை ஆனந்தி -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications