Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே! பிரமாண்ட கலைஞர் நூலகத்தின் வளர்ச்சிக்கு பெரிய உதவி செய்யும் ஐகோர்ட் கிளை.. சூப்பர்ல?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் கலைஞர் நூலகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு பேருதவியைச் செய்து வருகிறது. அது என்ன என்று பார்க்கலாம்..

மதுரையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. இந்த நூலகத்தை கடந்த ஜூலை 15ஆம் தேதி மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

High court madurai bench helps to development of kalaignar library

நவீன கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. 6 தளங்களுடன் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது.

இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் உள்ளன. நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரிவு உள்ளது. அதோடு, போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளன. 5-வது தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும் உள்ளது.

6-வது தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் பேர் நூலகத்திற்கு வருகை புரிகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக நூலகத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். இதனால், மதுரையில் புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கு நிகராக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வளர்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய பங்காற்றி வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்குகள் தவறானதாக இருந்தாலோ, நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதிகள் குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த உத்தரவிடுவது வழக்கம்.

High court madurai bench helps to development of kalaignar library

இவ்வாறு அபராதமாக விதிக்கப்படும் தொகையை முதல்வர் நிவாரண நிதி, வழக்கறிஞர் சேம நல நிதி, தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், அரசு பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்படும். கலைஞர் நூலகம் திறக்கப்பட்ட பிறகு, அபராதமாக விதிக்கப்படும் பணத்தை கலைஞர் நூலகத்துக்கு வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர். இதற்காக உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அபராதம் விதிக்கப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடுகின்றனர். இவ்வாறு சேர்ந்த பணத்தில் உயர்நீதிமன்றம் சார்பில் சட்டப் புத்தகங்கள் வாங்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக உயர் நீதிமன்றத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் இருந்து வரும் நிதியில் வாங்கப்படும் சட்டப் புத்தகங்களை வைப்பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3-வது மாடியில், "சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிரிவு" என்றே ஒரு தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் சட்டம் தொடர்புடைய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+