அப்பீல் செய்ய மட்டும் நேரம் இருக்கா? இதுக்கு மட்டும் வர்றீங்க.. மத்திய அரசை விமர்சித்த ஐகோர்ட் கிளை!
மதுரை : மத்திய அரசும், நிதி அமைச்சகமும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில்லை, ஆனால், அரசின் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் மேல்முறையீடு செய்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவரின் மனுவை விசாரித்தபோது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

மத்திய அரசு வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை முன்மொழிந்துள்ளது, இது குறித்து 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் தீரன் முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளை மதுரை உயர் நீதிமன்ற கிளை விமர்சித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சுப்பிரமணியம், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு, மத்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு தடை விதித்தது பற்றி உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன? என கோபமாக கேள்வி எழுப்பினர்.
மேலும், "பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு, அதன் உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்தால் மட்டும் உடனடியாக மேல்முறையீடு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications