நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. ரசாயனம் கலக்காத சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை தயார் செய்து, வழிபட்டு, பின்னர் ஊர்வலமாகச் சென்று அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகள் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசாயன கலவையால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் நீர் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விநாயகர் சிலைகளை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.
மேலும், விநாயகர் சிலையை செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரசாயனக் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி விநாயகர் சிலைகளையே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications