தூத்துக்குடி பெண்ணுக்கு 60000 ரூபாய்.. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்கள் கவனிக்க வேண்டியவை
மதுரை: குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தால், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் டாக்டர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாசுப்பிரமணியன் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைக்கு ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய சிக்கலாக இருக்கிறது. கல்விக்கட்டணம் அந்த அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது இல்லை.. அதற்கு மேல் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டில் பெண்களே இந்த சிகிச்சையை பிரசவம் முடிந்த கையோடு மேற்கொள்கிறார்கள். ஆண்களுக்கும் இந்த சிகிச்சை உள்ளது. ஆண்களுக்கு மிகவும் எளிதானது. ஒரே நாளில் இயல்பாக இருக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சையை பல ஆண்கள் செய்து கொள்ள முன்வருவது இல்லை. பெண்களே செய்து கொள்கிறார்கள்.

ஆண், பெண் என இருவருமே நிரந்தர கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஆனால் நிரந்தர சிகிச்சை என்றாலும், சில நேரங்களில் இந்த சிகிச்சை தோல்வியடைகிறது. இது ஏழை குடும்பங்களை பெரிய அளவில் சுமையாக மாறுகிறது. அப்படி நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற முடியும். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கருவுற்றவரின் மனைவிக்கு 60 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மீண்டும் கர்ப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மனைவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தோம். ஆனால் அவருக்கு இந்த ஆபரேஷனை டாக்டர்கள் முறையாக செய்யவில்லை. இதனால் அவர் மீண்டும் கர்ப்பம் ஆனார். எனவே கவனக்குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
கருப்பை குழாய் வளரும்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மருத்துவமனை டாக்டர் சார்பில் ஆஜரான வக்கீல், சில பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பின்பு கருப்பை குழாய் மீண்டும் வளர்ந்துவிடும். இதனால் மீண்டும் கருவுற வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆபரேஷனை குறை கூற இயலாது என வாதாடினார்.
60000 வழங்க உத்தரவு
விசாரணை முடிவில். கருத்தடை சிகிச்சை தோல்வியுறும் போது இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை பெற மனுதாரர் குடும்பத்தினருக்கு தகுதி உள்ளது. எனவே ரூ.60 ஆயிரம் இழப்பீடு தொகையை மனுதாரருக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ட்யூபெக்டமி சிகிச்சை
பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு ஆங்கிலத்தில் ட்யூபெக்டமி என்று பெயர் ஆகும். இந்த சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்றால், பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டை குழாய்கள் ஒரு செ.மீ அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு தைக்கப்பட்டுவிடும். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை. கர்ப்பப்பையை சென்றடையாமல் தடுக்கப்படும். இதனால் கருமுட்டை விந்தணுக்களுடன் சேர்வதை தடுக்க முடியும் என்பதால் நிரந்தர கருத்தடை சிகிச்சையாக பார்க்கப்படுகிறது.
சிகிச்சை தோல்வி அடைய வாய்ப்பு
இந்த சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது . ஏனெனில் சில பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பின்பு கருப்பை குழாய் மீண்டும் வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளதே காரணம் ஆகும். அதன் காரணமாகவே கருத்தடை சிகிச்சை தோல்வியுறும் போது இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பணத்தை பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications