மதுரை குலுங்க குலுங்க.. விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணி.. திரண்ட பொதுமக்கள்!
மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதுரையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவை படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மதுரையில் பொது இடங்களில் போலீசாரின் அனுமதி பெற்று ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. களிமண் உட்பட நீர்நிலையை மாசுபடுத்தாத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இன்று மாலை விளக்கு தூண் பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.

விநாயகர் சிலைகள், மேல தாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்து முன்னணி சார்பாக மதுரையில் நடைபெற்ற இந்த ஊர்வலகத்தில் ஏராளமான இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் சிறப்புரையாற்றி விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
விநாயகர் ஊர்வலம் மதுரை மேல மாசி வீதியில் நடந்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள், இந்த ஊர்வலத்தைக் காணத் திரண்டுள்ளனர். விநாயகர் சிலைகளுடன் வாகனங்கள் போட்டி போட்டுச் செல்ல, இந்த ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications