காரணமே வேற.. ஆசை யாரை விட்டது.. இளைஞருக்கு 2வதாக சிக்கிய பெண்.. அதுக்காக இப்படியா?.. பரபர மதுரை
மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை: 2வது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கணவன் செய்த காரியத்தால், முதல் மனைவி அதிர்ந்து போனார்.. கடைசியில் போலீசில் புகார் தரும் அளவுக்கு சென்றுவிட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.. 23 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் பாலகிருஷ்ணன்.. 30 வயதாகிறது..
சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடமாகிறது..

மோனிஷா
ஆனால், தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை வந்து போயுள்ளது.. இவர்களின் குடும்பத் தகராறையும் யாராலுமே தீர்த்து வைக்க முடியவில்லை.. ஒரு கட்டத்தில் மனைவி மோனிஷா கோபித்து கொண்டு, அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.. கடந்த சில மாதங்களாகவே அம்மா வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.. சண்டை போட்டு பல காலம் ஆகியும், இன்னும் சமாதானம் ஆகி கணவர் வீட்டுக்கு மோனிஷா வரவில்லையாம்.. இதனால் மோனிஷா மீது வெறுப்பு கொண்டார் பாலகிருஷ்ணன்..

விவாகரத்து
வீட்டிலிருந்து வராததால் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பாலகிருஷ்ணன் வேறொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது... ஆனால், முறைப்படி விவகாரத்தும் பெறவில்லை என்பதால், மனைவியின் அனுமதியும் பெற முடியாது என்பதால், மனைவி இருப்பதையே மறைக்க நினைத்தார்.

மோனிஷா
அதற்காக மோனிஷா இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அச்சடித்தார்.. வாட்சப், ஃபேஸ்புக் என மொத்த சோஷியல் மீடியாவில் மோனிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை வெளியிட்டார்.. இதை பார்த்ததும் பாலகிருஷ்ணன் சொந்தக்காரர்கள் எல்லாரும், மோனிஷா உண்மையிலேயே இறந்துவிட்டதாக நினைத்தார்கள். இதையே சாக்காக வைத்து, தன்னுடைய சொந்தக்கார பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார் பாலகிருஷ்ணன்..

கண்ணீர் அஞ்சலி
இதனிடையே, தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை, சோஷியல் மீடியாவில் பார்த்து அதிர்ந்து போனார் மோனிஷா.. இன்னொரு கல்யாணமும் பாலகிருஷ்ணனுக்கு நடந்துவிட்டதை அறிந்து ஆவேசமான மோனிஷா, தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை டிசைன் செய்து, சோஷியல் மீடியாவில் பரவவிட்ட கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அருகே உள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரையும் தந்தார்.

அதிர்ச்சி
இந்த புகாரின்பேரில் போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்... மனைவி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வேலைமெனக்கெட்டு டிசைன் செய்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டதுடன், தன்னுடைய சொந்தக்காரர்கள் நம்பும் வரையில் அந்த போஸ்டரை ஷேர் செய்து கொண்டே இருந்து, இறுதியில் 2வது கல்யாணமும் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications