பிரமாண்ட "ஆர்ஆர்ஆர்".. இப்படித்தான் இருக்கப் போகுது வசூல்.. அடேங்கப்பா.. எண்கணித நிபுணர் கணிப்பு!
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ். செல்வன்.
மதுரை: ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி வசூலில் சாதிக்குமா என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ். செல்வன்.
ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.' பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால் இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக காரணமே அந்த RRR என்ற எழுத்துக்கள்தான் என்று எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்துள்ளார்.
ஒருவரின் பிறந்த தேதிக்கு ஏற்ப நிறுவனத்தின் பெயர் எண் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அது உயர்வடையும்
RRR கூட்டு எண் 6 ட்ரபுள் வருகிறது. படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட காலம் தள்ளிப்போகிறது.
போஸ்டரில் RRR என்று போட்டதுதான் ரிலீஸ் தள்ளிப்போக காரணம் என்று கூறும் எண்கணித நிபுணர் அதற்கான காரணங்களை அடுக்குகிறார். DDV தானய்யாவின் பெயர் எண் கூட்டு எண் 3 அவர் பிறந்த எண் கூட்டுத்தொகை 4.
DVV entertainment நிறுவனத்தின் கூட்டுத்தொகை 3 மிகப்பிரம்மாண்ட நிறுவனம்.
RRR பட ஹீரோ NTR ஜூனியர் கூட்டுத்தொகை 30 பிறந்த எண் கூட்டுத்தொகை, ராம் சரண் பிறந்த தேதி 1, ஆலியா பட் பெயர் எண் கூட்டுத்தொகை 4 பிறந்த தேதி 6. இயக்குநர் SS ராஜமௌலி பெயர் எண் கூட்டுத்தொகை 5, அவர் பிறந்த தேதி கூட்டுத்தொகை 4. பிறந்த எண் 1 ராஜமவுலி இயக்கிய ஸ்டாண்ட் நம்பர் 1 ரிலீஸ் ஆன தேதி 3 தொடர்ந்து வருகிறது. இந்த ஆர்ஆர்ஆர் படம் 300 முதல் 400 கோடி போட்டு படம் எடுத்துள்ளனர்.
தானய்யா இதுவரை 21 படங்கள் தயாரித்துள்ளார் 1 மற்றும் 3ஆம் எண் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளது. 3ஆம் எண்ணுக்கும் 6ஆம் எண் ஒத்து வராது. 8ஆம் எண் சரிப்படாது. RRR கூட்டுத்தொகை 6 ராஜமௌலி கூட்டுத்தொகை 5 மிகப்பிரபஞ்ச சக்தியுள்ள எண். 1 மற்றும் 3ஆம் எண்தான் சக்தியுடைய எண்கள். RRR என்று வைத்திருப்பது சரியல்ல. அதுவே பலமுறை படம் ரிலீஸ் தள்ளிப்போனதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
8 மற்றும் 6 ஆம் எண் தானய்யா, ராஜமௌலிக்கு சரியில்லாத எண் ஆக உள்ளது. ரிலீஸ் தேதி அடிக்கடி மாறிக்கொண்டே உள்ளது. 11வது படம் பாகுபலி கூட்டுத்தொகை 4 கதாநாயகன் பிரபாஸ் கூட்டுத்தொகை 5 இரண்டு கூட்டணியும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது
Recommended Video
RRR என்பதை இரத்தம் ரணம் ரௌத்திரம் என முழு பெயரையும் பயன்படுத்தி புரமோட் செய்ய வேண்டும். அந்த எண்களின் கூட்டுத்தொகை 64 கூட்டுத்தொகை 1 வருவதால் மிகப்பெரிய வெற்றியைத் தரும் பொருளாதார ஏற்றம் அதிகரிக்கும். ரிலீஸ் தேதி சரியாக உள்ளது என்று கூறியுள்ளார். இவரது கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே உள்ளது. பாகுபலி வெற்றிப்பட இயக்குநருக்கு ஆர்ஆர்ஆர் எந்த அளவிற்கு வெற்றியை தரப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications