போலி ஆதார் அட்டை தயாரித்து கிரையப்பத்திரம்.. அதிர வைத்த மோசடி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையை சேர்ந்த சூர்யகலா என்பவர் தனது சொத்துக்களை சிலர் போலி ஆதார் அட்டை தயாரித்தது கிரையப்பத்திரம் பதிவு செய்துவிட்டார்கள் என்றும், இதுபற்றி நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று வாக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், போலீஸ் உதவி கமிஷனர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த சூர்யகலா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனிநபர்கள் சிலர், போலி ஆதார் அடையாள அட்டை தயாரித்து கிரையப்பத்திரம் பதிவு செய்துவிட்டார்கள். இந்த விவரம் எனக்கு தெரிந்த உடனே நாங்கள், மதுரை திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்களுடைய புகார் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.

aadhaar deed patta


இதனால் நாங்கள் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 120 (பி) உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் மதுரை திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை. சொத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் இல்லை. வழக்கை திருநகர போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். ஆகவே திருநகர் போலீசாரிடம் நிலுவையில் உள்ள இந்த வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் சூர்யகலா கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், போலி ஆதார் அட்டை தயாரித்து கூட்டுச்சதியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக, மனுதாரர் தொடர்பான வழக்கை போலீசார் கிடப்பில் போட்டு உள்ளது சட்டவிரோதம் என்று தெரிவித்தார். விசாரணை முடிவில், மனுதாரர் குற்றச்சாட்டின் பேரில் மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் திருப்பரங்குன்றம் உட்கோட்டம் உதவி போலீஸ் கமிஷனரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவர், இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தி 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+