துச்சமாக தூக்கி வீசிட்டாங்க! ரசிகர்களை வைத்தே விஜய்க்கு செக்! தவெகவிற்கு பெரிய சிக்கல்! அடுத்து என்ன
மதுரை: மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையில் கடந்த 21 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் நடைமேடையில் நடந்து வந்த அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற, அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, விஜயின் பாதுகாவலர்கள் குண்டுகட்டாக தூக்கி கீழே வீசினர்.

விஜய் மாநாடு - தவெக வழக்கு
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் தவெக தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் புகார் அளித்துள்ளனர்.அதில் மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவரை நெருங்கிய தன்னை விஜயின் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) தூக்கி வீசியதாகவும் இதனால் தனக்கு சிறு சிறு காயங்கள் உள்ளதாகவும் எனவே என்னை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 189 (2) 296 (B) 115,(I) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய் எப்படி எதிர்கொள்வார்?
இந்த வழக்கை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியலுக்கு வந்தபின் விஜய் மீது போடப்பட்டு உள்ள வலுவான வழக்குகளில் ஒன்றாகும். இதை விஜய் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்க்கு இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்படலாம், நேரில் விசாரணை செய்ய கூட அழைக்கப்படலாம். அதற்கு விஜய் ஆஜராவாரா? நேரில் விளக்கம் அளிப்பாரா? அல்லது கோர்ட் நோட்டீஸ் வழியாக பதில் அளிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய்க்கு நெருக்கடி
இதில் விஜய்க்கு முக்கியமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கை திமுக போடவில்லை. அதிமுகவும் போடவில்லை. வேறு எந்த கட்சியும் விஜய்க்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை. இந்த புகாரை கொடுத்தது விஜயின் ரசிகர். தமிழக வெற்றிக் கழக தொண்டர். ரசிகரை வைத்தே விஜய்க்கு செக் வைக்கப்பட்டு உள்ளது. ரசிகர் ஒருவர் மூலமே விஜய்க்கு அரசியல் ரீதியாக கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இதற்கு விளக்கம் அளித்து விஜய் அறிக்கை மட்டும் கொடுத்தால் சரியாக இருக்காது. பாதிக்கப்பட்ட நபரை சந்தித்து விஜய் பேசுவது சரியாக இருக்கலாம். அது ஒருவகையில் வழக்கை வாபஸ் வாங்க அல்லது மட்டுப்படுத்த வசதியாக இருக்கும். இல்லையென்றால் வழக்கை எதிர்கொள்வதாக இருந்தால்.. தனது சொந்த பாதுகாப்பு என்று கூறி விஜய் வாதம் வைக்க முடியும். ஆனால் அதுவும்.. விஜய்க்கு அது மனித உரிமை என்ற கோணத்தில் நெருக்கடியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் விஜய் இதை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்












Click it and Unblock the Notifications