ஓவர் நெருக்கம்.. டூயட் வேற.. குறுக்கே வந்த பெண்ணுக்கு "விஷ ஊசி".. வசமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி
திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்
மதுரை: திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்ததால் மனைவியை விஷ ஊசி மூலம் கொலை செய்ய முயன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த இவரது காதலி உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அன்னூர் மசகவுண்டன் செட்டி பாளையம் அருகே வசித்து வருபவர் ஸ்ரீதரன். தனியார் மருத்துவமனையில் கேன்டின் மேனேஜராக பணியாற்றி வரும் இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், இதே மருத்துவமனையில் வேலை செய்யும் மற்றொரு பெண்ணுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
இதனால் இருவரும் ஒருவரையொருவர் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஒரு நாள் ஸ்ரீதரனின் மனைவிக்கு தெரிய வரவே விஷயம் பெரியதாக வெடித்திருக்கிறது. மனைவி இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார். எனவே சில நாட்கள் இந்த விவகாரங்களிலிருந்து ஸ்ரீதரன் விலகி இருந்துள்ளார். இருப்பினும் மீண்டும் இதேபோல தன்னுடன் பணி செய்யும் பெண்ணுடன் ஊர் சுற்றியுள்ளார்.

திட்டம்
இது குறித்து அறிந்த ஸ்ரீதரனின் மனைவி தனது தாய் தந்தையிடம் முறையிட இருப்பதாக கூறியுள்ளார். எனவே பயந்து போன ஸ்ரீதரன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அப்போதுதான் ஸ்ரீதரனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஸ்ரீதரனும், அவரது காதலியும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். திட்டத்தின்படி ஸ்ரீதரனின் மனைவிக்கு விஷ ஊசி செலுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தான் பணி செய்யும் மருத்துவமனையில் இருந்த விஷ ஊசியை ஸ்ரீதரனின் காதலி கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

விஷ ஊசி
அதேபோல ஸ்ரீதரனும் இந்த ஊசியை செலுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி தான் ஊசியை செலுத்திக்கொள்ள போவதில்லை என்று உறுதியுடன் இருந்திருக்கிறார். இதனால் ஸ்ரீதரன் தாக்குதலில் ஈடுபட மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி, ஸ்ரீதரன் தனக்கு வலுகட்டாயமாக ஊசி செலுத்த முயன்றார் என்றும், அது விஷ ஊசியாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ள முயற்சிக்கையில், ஸ்ரீதரனின் காதலி வெளியூர் தப்பி சென்றுள்ளார்.

விசாரணை
இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. முதலில் ஸ்ரீதரனை கைது செய்த காவல்துறையினர் அடுத்தடுத்து காதலி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக ஸ்ரீதரனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கெனவே சண்டை நீடித்து வந்த நிலையில், மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி வலுக்கட்டாயமாக ஊசி ஒன்றை ஸ்ரீதரன் செலுத்த முயன்றிருக்கிறார். இந்த ஊசி குறித்து விசாரிக்கையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

கைது
எனவே அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்தோம். விசாரணையில் அது விஷ ஊசி என்றும், இதற்கு உடந்தையாக அவரது காதலி மற்றும் நண்பர்கள் 3 பேர் இருந்திருக்கிறார்கள். நாங்கள் ஸ்ரீதரனை கைது செய்ததை அறிந்து கொண்ட அவருடைய காதலி மற்றும் நண்பர்கள் கோவைக்கு தப்பி சென்றனர். பின்னர் அவர்களின் செல்போன் சிக்னலை கொண்டு தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மனைவியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய கணவர் முயன்றுள்ள சம்பவம் மதுரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications