சுதாவுக்கு நிறைய பாய் பிரண்ட்.. ஏகப்பட்ட கசமுசா வீடியோக்கள்.. கடைசியில் பரிதாப கொலை!
மனைவியை கொன்ற கணவன் தலைமறைவாகி உள்ளார்
மதுரை: சுதாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள்.. ஏகப்பட்ட வீடியோக்கள்.. கடைசியில் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.. சொல்ல சொல்ல கேட்காமல் டிக்டாக் வீடியோவில் அட்டகாசம் செய்த மனைவியை கணவன் கொன்றே விட்டார்!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அசோக்.. இவருக்கு 32 வயதாகிறது.. இவரது மனைவி சுதா.. அவருக்கு 27 வயது!
கல்யாணம் ஆகி 8 வருடமாகிறது.. இது ஒரு லவ் மேரேஜ்.. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அசோக்கிற்கு குடிப்பழக்கம் உள்ளதாம்.. அதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது.
இந்நிலையில் சுதா நேற்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.. அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.. யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை. இதை பற்றின தகவல் கிடைத்ததும் திருநகர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.

சடலம்
ஆனால் வீட்டில் கணவர் அசோக் இல்லை.. பிள்ளைகளும் இல்லை... மனைவி இறந்த நிலையில் அசோக் மாயமாகி உள்ளதால் சந்தேகம் அவர் மீது திரும்பி உள்ளது.. இதனால் அவரை தேடும் பணி ஒரு பக்கம் நடந்து வருகிறது.. அதேபோல் சுதாவின் மரணம் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுதா ஒரு டிக்டாக் பிரியை.. நிறைய வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிடுவாராம்..

டிக்டாக்
இப்படி வீடியோபோட வேண்டாம் என்று அசோக் சொல்லியும் சுதா கேட்கவில்லையாம்.. இதனாலேயே இவர்களுக்குள் சண்டை நடந்து வந்திருக்கிறது.. இந்த சண்டையில் ஒரு வருடத்துக்கு முன்பு சுதா வீட்டை விட்டே போய்விட்டாராம்.. அதேபோல 2 மாசத்துக்கு முன்பும் சுதா திடீரென வீட்டை விட்டு போய்விட்டதாக அசோக் இதே திருநகர் போலீசில் புகாரும் தந்திருக்கிறார்.. இந்த 2 புகாரின் பேரில் போலீசார் சுதாவை கண்டுபிடித்து அசோக்கிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

நண்பர்கள்
சுதா டிக்டாக் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகி வந்தது, அசோக்கிற்கு பிடிக்கவில்லை... இதுதான் பிரச்சனையே.. சந்தேகம் அதிகமாகி நேற்று முன்தினம்கூட சண்டை வந்துள்ளது.. அந்த கோபத்தில்தான் 2 பிள்ளைகளையும் கூப்பிட்டு, மனைவியுடன் இருக்க வேண்டாம் எனக்கூறி, தன் பெற்றோர் வீட்டிற்கு அசோக் அழைத்து சென்று விட்டு வந்துள்ளார்.

தலைமறைவு
தொடர்ந்து சண்டை வந்துள்ள நிலையில்தான் சுதாவின் கழுத்தை அசோக் நெரித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.. டிக்டாக் விபரீதம் இப்போது இன்னொரு குடும்பத்தையும் நாசம் செய்துள்ளது.. எப்படியும் அசோக் கைதாவார் என்றும் தெரிகிறது.. ஒன்றும் அறியாத அந்த 2 குழந்தைகளும் இன்று தாய்-தகப்பன் இன்றி கண்ணீர் விட்டு வருகின்றனர்!!!
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications