கொஞ்சம் கொஞ்சமாக.. தவழ்ந்து தவழ்ந்து உயர் பதவிக்கு வந்தேன்.. அதையும் கொச்சைப்படுத்துறாங்க.. எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை போலத்தான் அமர்ந்து இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

I came to the highest position gradually says ADMK GS Edappadi Palaniswami

இந்த கூட்டம் தான் மதரார்பின்மைக்கு எடுத்துக்காட்டு கூட்டம். வாய் அளவில் பேசினால் போதாது. சர்க்கரை என்றால் இனிக்காது அதனை வாயில் போட்டால் தான் இனிக்கும். இது இந்த கூட்டத்திலே இனித்து கொண்டிருக்கிறது. நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை போலத்தான் அமர்ந்து இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதைக்கூட கொச்சைப்படுத்துகிறார்கள்.

இன்றைய முதல்வர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத ஒரு முதல்வர் இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார். நான் கிளைச்செயலாளராக இருந்து.. உழைத்து கஷ்டப்பட்டு பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறேன். முதலமைச்சர் ஆனேன். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படியா.. உங்க அப்பாவின் மூலமாக உழைப்பு இன்றி எம்எல்ஏ ஆகி முதல்வராகியிருக்கிறார்.

எப்போதும் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சர்.. எப்போதுமே வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் என்று சொன்னால் அது தமிழ்நாடு முதல்வராகத்தான் இருக்க முடியும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது தாரக மந்திரம். அதைத்தான் எங்களது தலைவர்கள் எங்களுக்கு சொல்லி தந்திருக்கிறார்கள்.

அதிமுகவை பொறுத்தவரைக்கும் எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம் என்பதை உறுதிபட கூறிக்கொள்கிறேன். நன் முதலமைச்சராக இருந்தேன். எவ்வளவு இக்கட்டமான காலம் என்பது உங்களுக்கு தெரியும். 4 பேர் தான் அதிகம். நான்கரை ஆண்டு காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போது வெளியில் ஒருத்தர் போயிருக்காரு இல்லையா..

அவரை வைத்துக்கொண்டு நான் காலத்தை ஓட்ட வேண்டியிருந்தது. அவரு நான் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் ஆட்சி இருந்திருக்காது என்று கூறுகிறார். அவர் எதிர்த்து ஓட்டு போட்ட பிறகு ஆட்சி அமைந்தது என்றால் அது அதிமுக தான். அதை மறைந்துவிட்டு பேசுகிறார். மக்களுக்கு யார் என்று தெரியும். அப்படிப்பட்டவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு தான் நான் ஆட்சி செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+