மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தால்.. 5 ஆண்டுகளில் மதுரையில் மெட்ரோ ரயில்.. மெட்ரோ இயக்குநர் சித்திக்!
மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் அனைத்து பணிகளும் 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். மதுரை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், விரைவில் மெட்ரோ திட்டத்திற்காக நில எடுப்பு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையில், மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே 17 நிறுத்தங்கள் இடம்பெறும் வகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. சுரங்கப் பாதை அமைத்து திட்டத்தை செயல்படுத்தினால், ரூ.8,500 கோடியாக கணக்கிடப்பட்டது. ஆனால் விரிவான திட்ட அறிக்கையில் ரூ.11,360 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு முறை ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் மதுரையில் ஆய்வும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் மதுரையில் ஆய்வு நடத்தி இருக்கிறார்.
இதன்பின் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில், மதுரை ரயில் நிலையத்தை புதுப்பித்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றும் வரவிருக்கிறது. அதனை கட்டப்போகிறோம்.
இவை இரண்டையும் ஒன்றாக ஒருங்கிணைக்க இன்று ஆய்வு நடத்தியுள்ளோம். எதிர்காலத்தில் பயணிகள் எப்படி ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்வதற்காக ஆய்வு நடத்தினோம். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் அடுத்த சில மாதங்களில் டெண்டர் பணிகள் தொடங்கிவிடுவோம். அதற்கு முன்பாக நில எடுப்பு பணிகளை முடிக்க வேண்டும்.
அதனை விரைவாக தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மதுரை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கிவிட்டால், முழுமையாக முடிவடைய 5 ஆண்டுகளாகும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications