மணல் கொள்ளையர்களுக்கு ஆப்பு.. ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
திருச்சி: திருச்சி ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளத்தில் சட்ட விதிகளை மீறி தினந்தோறும் 500 லாரிகளில் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புகாருக்குள்ளான மாவடிகுளம் தண்ணீர் எந்த அளவு உள்ளது எனவும், நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுள்ளதா என்பது குறித்து திருச்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காவேரி நீர் ஆதாரத்திற்கான பாதுகாப்பு சங்க தலைவர் சுடலை கண்ணு என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்," திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளம் இது 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியின் மிகப் பெரிய நீர் தேக்கமாகவும் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்த குளம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மேம்பாலம் அமைப்பதற்காக கிராவல் மணல் அள்ள அனுமதி பெற்றதாகக் கூறி மாவடி குளத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. சட்ட விதிகளை பின்பற்றாமல் கனகரக வாகனங்கள் மூலம் தினந்தோறும் (500) ஐநூறு லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளும் போது ஏரியில் ஆயக்கட்டு நிலம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும்.
இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டால் பண பலமும் அதிகார பலமும் இருப்பதாக கூறி மிரட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக மணல் அள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் உடனடியாக அந்த பகுதியில் மணல் அள்ளுவதற்கும் தடைவிதிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது இதனால் விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் மிகவும் பாதாளத்தில் உள்ளது என்பதற்கான டிரோன் வீடியோ காட்சிகள் உள்ளது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்" திருச்சி ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளம் பகுதியில் தண்ணீர் எந்த அளவு உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, மிகவும் பாதாளத்திற்கு தண்ணீர் சென்றுள்ளதா? என்பது குறித்து திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து வருவாய்த் துறை மற்றும் கனிம வளத் துறை அதிகாரிகள் இணைந்து ட்ரோன் மூலம் அளவீடு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications