டோக்கியோ போல மாறும் மதுரை.. இனி பரோட்டோ மட்டுமல்ல "இதுவும்தான்" பேமஸ்.. ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்
மதுரை: மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய முக்கிய செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக மதுரை மக்களுக்கு தொடர் நல்ல செய்திகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. முக்கியமாக மதுரையில் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதற்கான பணிகளும் வேகமாக தொடங்கி நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் மதுரையில் மெட்ரோவும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது. மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது.
அதாவது எங்கிருந்து எங்கே பாதை அமைக்கலாம்.. மேலே பாலம் அமைப்பது.. கீழே சாலைக்கு அடியில் அமைப்பது போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட உள்ளது. அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.
சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.
இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.
திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.
புதிய அறிவிப்பு; இந்த நிலையில்தான் மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய முக்கிய செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரையில் ரேஸ்கோர்ஸ் சாலை முதல் அத்திகுளம் சந்திப்பு வரையிலான எட்டு கிலோமீட்டர் தூரத்தில் சுகாதார நடைபாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த பகுதிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் செய்த அமைச்சர் மா. சு, டோக்கியோவில் 'ஹெல்த் வால்க்' பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து, மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் இதேபோல் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதன் ஒரு கட்டமாக டோக்கியோவில் இருப்பது போல மதுரை அமைக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ் சங்க கட்டிடம், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் மதுரையின் பல பிரபலமான உணவகங்கள் உள்ளிட்ட நகரின் பல முக்கிய அடையாளங்கள் இந்த பகுதியில் வருவதால் ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் அத்திகுளம் சந்திப்பு இடையேயான பகுதியை இந்த ஹெல்த் வால்க் அமைப்பதற்காக நாங்கள் தேர்வு செய்தோம் என்று அமைச்சர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications