ஜஸ்ட் 2 மணி நேரம்தான்.. மதுரை ரயில் நிலையத்தில் சாட்டையை சுழற்றிய போலீஸ்.. 4 மாத குழந்தை மீட்பு

மதுரையில் 4 மாத குழந்தை கடத்தப்பட்டு 2 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஷ் குமார். இவர் தனது மனைவி பாத்திமா அலி மற்றும் தங்களது 3 மாத குழந்தை ஷாலினியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் மதுரை வந்திருந்தார். இதனையடுத்து வந்த வேலையை முடித்துவிட்டு மூவரும் திண்டுக்கல் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். இதில் மூவரும் அசதியில் ரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கிவிட சிறிது நேரம் கழித்து கண் விழித்த பார்த்திருக்கின்றனர்.

அப்போதுதான் தங்களுடைய குழந்தை ஷாலினியை காணவில்லை என்று தெரிந்துள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் உடனடியாக காவல்நிலையத்தை அணுகியுள்ளனர். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த திலகர் திடல் நிலைய ஆய்வாளர் சங்கர், சக காவலர்களுடன் குழந்தையை தேடும் பணியில் இறங்கியுள்ளார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

அவர்கள் நடைமேடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் குழந்தையை யாரோ ஒரு நபர் தூக்கிச் செல்வது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு சந்தேகத்திற்குரிய நபரை தேடியுள்ளனர். இந்த நபர் தொடர்பான அடையாளங்கள் மதுரை நகர் காவல் நிலையம் முழுவதும் பகிரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல்நிலையத்தில் உள்ள காவலர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மேற்குறிப்பிட்ட அடையாளத்துடன் யாராவது இருக்கிறார்களா? என்று தேட தொடங்கினர். இப்படியாக சுமார் 2 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

கைது

கைது

பின்னர் காளவாசல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நபர் ஒருவர் கையில் குழந்தையுடன் நின்றுக்கொண்டிருந்துள்ளார். இவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் முழு உண்மையையும் கூறியுள்ளார். அதாவது, "பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தியது நான்தான். இதற்கு உடந்தையாக மற்றொரு பெண் இருந்தார்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து இவர் அளித்த தகவலின் பேரில் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தப்பட்டு 2 மணி நேரத்தில் அக்குழந்தையை காவல்துறையினரும், ரயில்வே போலீசாரும் சேர்ந்து மீட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் குழந்தை கடத்தல் அதிக அளவில் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதில் சோகம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கடத்தல் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 1,714 பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளே. இந்த எண்ணிக்கையானது 2021ம் ஆண்டில் 2,189 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா

இந்தியா

இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் தேவைகளுக்காக விற்கப்படுகின்றனர். இதற்காகவே இவர்களை சமூக விரோதிகள் வளர்க்கின்றனர். பின்னர் பொதுத்தளங்களில் பாலியல் தொழிலாளியாக இக்குழந்தைகள் களமிறக்கப்படுகின்றனர். அதேபோல உடல் உறுப்புகளுக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இவற்றை தடுக்க காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைள் பாராட்டும் வகையில் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+