மதுரை ஜல்லிக்கட்டு திருவிழா...சிறப்பு விருந்தினராக பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மதுரை : 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டியும், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அமைதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு குழுவினர், நாட்டு மாடுகளை மட்டுமே போட்டியில் அனுதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறியும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்கவேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை பொதுக்குழு கூட்டத்திற்குப் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் உறுதிப்படுத்தினார். மேலும் 600 இடங்களுக்கு பதிலாக தற்போது 100 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாகவும், மற்ற மாவட்டங்களில் போட்டிகள் நடத்த அந்தந்த ஆட்சியர்கள் அனுமதி தரவேண்டும் எனவும் ராஜசேகர் தெரிவித்தார்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications