100 நாள் வேலை திட்டப் பணிகள்.. ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க முடியுமா? கேள்வி கேட்ட நீதிமன்றம்!

100 நாள் வேலை திட்டப் பணிகளை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வாய்ப்பு உள்ளதா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விபரம் பெற்று பதில் அளிக்கவும் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தேவைக்கேற்ப திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.

Is there any possibility of monitoring 100 day works through GPS technology Questions Madurai bench of High Court

100 நாட்கள் வேலை தர அரசு தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும். கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், இந்த 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான வழக்கில், நுாறு நாள் வேலையை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பு உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தாருகாபுரம் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

Is there any possibility of monitoring 100 day works through GPS technology Questions Madurai bench of High Court

அந்த மனுவில் தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணி நடக்கிறது. இதன் பொறுப்பாளர்கள் மூன்று மாதங்கள் தான் பணி புரிய வேண்டும். ஆனால் அங்கு பொறுப்பாளர் ஏழு மாதங்களாக தொடர்கிறார். அதேபோல் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றனர். இதற்கு அரசு நிதியை பயன்படுத்துகின்றனர். அரசு நிதி விரயமாகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணை நீதிபதிகள், நுாறு நாள் வேலையை ஜி.பி.எஸ். எனும் ஓரிடத்தை துல்லியமாக வானிலிருந்து செயற்கைக்கோள் துணையுடன் அறியும் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை செயலரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் பிப். 27ல் தெரிவிக்க வேண்டும் என்று வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+