Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்மனை போல ஜல்லிக்கட்டு மைதானம்.. துள்ளும் காளைகள்.. பொங்கலுக்கு அதிரப்போகும் அலங்காநல்லூர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மாநகரத்தின் பெருமைக்கு மீண்டும் ஒரு மணி மகுடமாக அலங்காநல்லூரில் அரண்மனை போல ஜல்லிக்கட்டு அரங்கம் தயாராகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறும். இதனை காண பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். மக்கள் வசதிக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

Jallikattu arena in Alanganallur under construction for Pongal festival competitions

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்ட மக்களின் லேண்ட் மார்க் ஆக மாறி இருக்கிறது. தற்போது அதே மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு என்று தனி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு நிரந்தரமான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் சட்டசபையில் அறிவித்ததைப் போலவே அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன.

Jallikattu arena in Alanganallur under construction for Pongal festival competitions

கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 9 மாதங்களில் அரண்மனை போல கட்டப்பட்டுள்ளது ஜல்லிக்கட்டு மைதானம். அரங்கத்தின் நுழைவாயிலில் 4 பிரம்மாண்ட தூண்கள் எழுந்து நிற்கின்றன. இதைப் போன்று மூன்று நுழைவாயில்கள் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னதாக வாகனங்களை நிறுத்துவதற்கான மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.
மக்களின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே போட்டியில் பங்கேற்க வரும் காளைகளைக் கட்டிவைப்பதற்காக இடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியே அதன் வழியே காளைகள் வாடி வாசலுக்கு வரிசையாக வருவதற்காக வழி செய்து தரப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தரமான கான்கிரீட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 66 ஏக்கர் நிலத்தில் 16 ஏக்கரில் இந்த மைதானம் அமைந்துள்ளது. கீழ்த்தளத்தில்தான் அட்மின் ஆபீஸ் மற்றும் வாடிவாசலை அடுத்து செய்தியாளர்களுக்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது ரிஜிஸ்ட்ரேஷன் ரூம் மற்றும் மியூசியம் அதே பகுதியில் கடைகள், லாக்கர் அறை, டார்மெட்ரி கூட அமைந்துள்ளது.

பணிகள் விறுவிறு: டயர் ஒன் பகுதிக்குப் பின்புறம் விஜபி சூட் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே சாப்பாட்டு அறையும் டார்மெட்ரியும் உள்ளது. 6 மாதங்களுக்கு முன்னால் வெறும் செம்மண் தரையாகக் காட்சி அளித்த இடத்தில் தற்போது அரண்மனை போல கம்பீரமாக ஸ்டேடியம் நிமிர்ந்து நிற்கிறது.

ஜல்லிக்கட்டு மைதானத்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 95 சதவிகிதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன. முழு வீச்சில் பணிகள் நடந்து முடிந்து அரண்மனை போல கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஜல்லிக்கட்டு மைதானம்.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் போட்டிகளை மட்டுமல்லாது சுற்றிலும் உள்ள பசுமையான மலையும் குளிர்ச்சியான இயற்கைக் சூழ்நிலைகளையும் சேர்த்தே ரசிக்கலாம். கிட்டத்தட்ட ரூ.44.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் இரண்டாம் தளத்தில் ஸ்டோர் ரூம் ஒன்றும் உபகரணங்களை வைப்பதற்கான எக்யூப்மென்ட் ரூம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு அரங்க பணிகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஜனவரி முதல் வாரத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜனவரி 15 தை பொங்கலுக்கு புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரப்போவதை பார்த்து அலங்காநல்லூர் அதிரத்தான் போகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே இங்கு நடக்கப்போவதில்லை. இது ஒரு பொது மைதானம். இங்கு ஆண்டுதோறும் கபடி, ஃபுட்பால் போன்ற பல போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். அதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்தது. கடந்த 2 ஆண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதே போல குறுகிய காலத்தில் அரண்மனை போல ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டி முடித்துள்ளது திமுக அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+