CISF வீரர்களை பாதுகாப்புக்கு ஏன் அழைத்துச் சென்றீர்கள்? ராம ரவிக்குமாருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்ப யார் அதிகாரம் தந்தது, அவர்களை ஏன் அழைத்துச் சென்றீர்கள் என மனுதாரர் ராமரவிக்குமாருக்கு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை பணி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ரவீந்திரன் வாதங்களை முன் வைத்து வருகிறார். அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகையில், நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது. தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
144 தடை
சிஐஎஸ் எப் பாதுகாப்பு நீதிமன்றத்துக்கே. மனுதாரருக்கு அல்ல. தொடக்க நிலையிலேயே நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு என்ற முடிவுக்கு வந்து விட்டார். நீதிபதியின் உத்தரவால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. கலவரம் ஏற்படாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்.அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்க பட்டுள்ளனர் . மதப்பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது. தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
என்ன அதிகாரம்
அப்போது நீதிபதிகள், "CISF வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்ப என்ன அதிகாரம் இருக்கிறது? காவல் துறை மறுத்ததால் சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்து சென்றோம். காவல் துறை பாதுகாப்பு வழங்க முடியாது என கூறினார்களா? நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிபதிகள் கேள்வி
மேலும் நீதிபதிகள், "தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அப்படியான நிலையில் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி மனுத்தாக்கல் செய்தது ஏன்? மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்ய விடாமல் தடுப்பது என்பது அல்ல. இரண்டு தரப்புமே இணைந்து தங்களுக்கு செய்ய அனுமதிப்பதிலும் இருக்கிறது மத நல்லிணக்கம். கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த தீபத் தூண்- கோவிலை விட மிகப் பழமையானதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உச்சி பிள்ளையார் கோயில்
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிரது. ஆனல் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். எனினும் கோயில் நிர்வாகம், வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே நேற்று தீபம் ஏற்றியது. நேற்று மாலை 6 மணிக்கு தீபத் தூணில் விளக்கேற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என கூறிய நீதிபதி, சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று விளக்கு ஏற்றுமாறு ராம ரவிக்குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
போலீஸார் மண்டை உடைப்பு
இதனிடையே தீபத் தூணில் நேற்று விளக்கேற்றாததால் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து நேற்று சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் விளக்கேற்ற ராம ரவிக்குமார் சென்ற போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு போலீஸார் காயமடைந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications