வைகையில் இறங்கும் கள்ளழகர்..யாராக இருந்தாலும் பாஸ் அவசியம்..பழனிவேல் தியாகராஜன் உத்தரவு
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், பெரிய நபர்களுக்கு தெரிந்தவர்கள் என மொத்தமாக உள்ளே விடக்கூடாது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
108 வைணவ தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா முதன்மை பெற்ற திருவிழாவாகும். தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு வரும் மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆயிரம்பொன் சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதற்காக அழகர்கோவிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தகால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது.
கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்சியாக முகூர்த்தகால் இன்று நடப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளழகர் மதுரை வரும் போது அவர் எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் முகூர்த்தகால் நடப்பட்டு மதுரை நகர் எங்கும் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.
இதனிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடங்களில் அமைச்சர்கள், மதுரை மேயர், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விழாவிற்கான பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மட்டுமே கண்காணிக்க வேண்டும் கோவில் நிர்வாகம் தலையிட வேண்டாம் எனவும், விழா நடைபெறும் பகுதிகளுக்குள் அனுமதி சீட்டு இல்லாத நபர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம், அமைச்சர்களோ, நீதித்துறையினரோ யாராக இருந்தாலும் உரிய பாஸ் இன்றி காவல்துறையினர் அனுமதிக்ககூடாது என்று
கூறினார். அதிகாரிகள், பெரிய நபர்களுக்கு தெரிந்தோர் என 10-20 பேரை மொத்தமாக உள்ளே விடக்கூடாது எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மே 3ஆம் தேதி கண்டாங்கி புடவை கட்டி பல்லாக்கில் புறப்படுவார். அப்போது அதிர்வேட்டு முழங்கும். கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஆகிய ஊர்களில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுவார் கள்ளழகர். வழியெங்கும் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனைகள் செய்வார்கள். பக்தர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மதுரைக்கு வருவார் கள்ளழகர்.
மே 4ஆம் தேதி அதிகாலையில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெறும். தல்லாக்குளம் சீனிவாச பெருமாள் கோவிலில் இரவு தங்கும் சுந்தரராஜபெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துபடி நடைபெறும் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை சாத்தி, பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து தங்கக் குதிரை வாகனத்தின் மீதேறி மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குவார் கள்ளழகர்.
வைகையில் கள்ளழகர் இறங்கும் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வைகையில் இறங்குவார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வைகையில் இறங்க அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications