சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.. ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Recommended Video

வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.
இதில் அந்த இரு ஜாம்பவான்களுக்கு இருந்த மக்கள் செல்வாக்கை தங்கள் வசம் கொண்டு வர அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அது போல் நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர்.

கூட்டம்
இந்த நிலையில் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் நேற்றைய தினம் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற கமல்ஹாசனுக்கு சென்ற இடத்தில் எல்லாம் கூட்டம் அலைமோதியது.

தொகுதி
இன்றைய தினம் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் இந்த சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும். அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் கருத்து சொல்லமாட்டேன் நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி.

மாநகரம்
ஒரு நகரம் மாநகரமாக மாற கார்ப்பரேட் நிறுவனங்கள் அவசியம். எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் தேவையற்றது என்பது மடமை ஆகும். ஆனால் சிறு குறு தொழில் , கார்ப்பரேட் சமமாக இருக்க வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கம்.

தூக்கம்
அரசியல் பயணம் என்பது லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் உள்ளனர் என்றார் கமல்.

ரஜினி
ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் கூறுகையில் ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன். ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என்றார் கமல்ஹாசன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications