எங்க கட்சி குழந்தை மாதிரி..”டார்ச் லைட்”நல்ல குழந்தையாக கண்டிப்பாக வளரும்.. உறுதியளிக்கும் கமல்ஹாசன்
மதுரை : மக்கள் நீதி மய்யம் குழந்தை போன்றது எனவும், அது நல்ல குழந்தையாக வளரும் என்று மக்கள் நம்பி தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மதுரையில் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார வாகனத்திற்கு முன் இருந்த கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டவாறே இருந்ததால் கோபமடைந்த அவர் கட்சியினரை நோக்கி மைக்கை நீட்டி பேசுமாறு கோபித்துக்கொண்டார்.

கமல்ஹாசன் பிரச்சாரம்
தொடர்ந்து பிரச்சாரத்தின் போது பேசிய கமல்ஹாசன்," சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால் குழந்தைகளை சாலையில் புழுதி காட்டில் விளையாட தவிர்க்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரம் உங்கள் கையில் உள்ளது என்பதை மக்களுக்கு நியாபகம் படுத்தும் கட்சியாக மநீம செய்து வருகிறது.

சுவடே இல்லை
கிராமசபை கூட்டம் என்பதை நாங்கள் அறிமுகம் படுத்த வில்லை ஏற்கனவே மக்களின் தேவைகளை கூட்டாக முடிவெடுத்து ஒப்பந்தம் செய்து சரி செய்வதே. 586 கோடி செலவில் மதுரையில் வளர்ச்சி பணிக்கு செலவிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் அதற்கான சுவடே இல்லை.

மநீம குழந்தை
மநீம கட்சி குழந்தை போன்றது, நல்ல குழந்தையாக கட்சி வளரும். அடுத்தமுறை வரும் தேர்தலில் நான் வாக்கு சேகரிக்க வர வேண்டும் என்ற அவசியம் இருக்காது, வெற்றி விழாக்கு மட்டும் வர வேண்டிய அவசியம் வாய்ப்பளித்தால் உங்களுக்கு தெரியும்.

வாக்களிப்பது கடமை
ஒரு கோடி செலவு செய்து கவுன்சிலர் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற பின் அதனை மீட்டெடுக்கதான் முயற்சி செய்வார்கள் அதனை தடுக்க வேண்டுமென்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிடுவோர்களுக்கு வாக்களிப்பது கடமையாக மக்கள் நினைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications