நல்லவேளை நிலவில் பாட்டி வடைச் சுட்ட கதையெல்லாம் பாஜக எம்பிக்களுக்கு தெரியலை! கனிமொழி கலகல பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: நிலவில் பாட்டி உள்ள கதையை பற்றி வடக்கில் உள்ள தலைவர்கள் அறிந்திருந்தால், நிலவில் முதலில் கால் வைத்தவர் பாட்டிதான் என்பார்கள் என மதுரை புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. நகைச்சுவையாக பேசியிருந்தார். நிலவில் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதற்கு பதிலாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர், அனுமன் என சொன்னதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (13/09/2025) விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு, 'தெற்கின் எழுச்சி' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

kanimozhi madurai

நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி.; தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

தேவநாகரி

மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

தமிழ் பண்பாடு

தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால்தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அதன் பண்பாடும், கலாசாரமும் இன்னும் பின்பற்றப்படுகிறது. நம் மொழி தமிழ்நாடு மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

kanimozhi madurai

5300 ஆண்டுகளுக்கு முன்பு

நமது முன்னோர்கள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகளை பயன்படுத்தினர் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம். எனவே, இனி உலக வரலாறு எழுத வேண்டுமெனில், தமிழகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை

இந்து சமய அறநிலையத் துறையை நீக்கி, கோயில்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 1939-ஆம் ஆண்டு முதன்முதலில் மதுரையில் போராடியவர் வைத்தியநாதய்யர். தொடர்ந்து, பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற திராவிட இயக்கத்தைச் சேர்ந்தோர் போராடினர்.

சமூகநல்லிணக்கம்

சமூக நல்லிணக்கம், பெண் கல்வி, திராவிட இயக்க வளர்ச்சிக்காக முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி போன்றோரும் போராடினர். இதன் விளைவாகத்தான் இன்றளவும் தமிழகத்தில் தமிழரின் பண்பாடு தொடர்ந்து வருகிறது.

மன்னர்கள் கடல் கடந்து

தமிழ் மன்னர்கள் கடல் கடந்தும் வணிகத்தில் சிறந்து விளங்கினர். இதேபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றார்.

kanimozhi madurai

அடிமைப்படுத்த இயலாது

பண்டைய கால தமிழர்கள் போரில் வெற்றி பெற்றாலும், அந்த நாட்டு மக்களையும், அவர்களது பண்பாட்டையும் சிதைக்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழர்களுக்கு கிடையாது. இதேபோல, தமிழர்களை யாரும் அடிமைப்படுத்தவும் இயலாது. தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக திராவிட இயக்கங்கள் திகழும்.

நிலவுக்கு முதலில் சென்றவர் யார்?

நிலவுக்கு முதலில் சென்றவர் யார் என்று கேட்டால், குழந்தைகள் 'நீல் ஆம்ஸ்ட்ராங்' என்று சரியான பதிலைச் சொல்வார்கள். ஆனால், வடக்கில் உள்ள சில தலைவர்களிடம் கேட்டால் வேறு பதில் வரும்.

பாட்டி கதை

தமிழ்நாட்டில், நிலவில் பாட்டி உள்ள கதையை குழந்தைகளிடம் சொல்லுவோம். நல்ல வேலை, அந்தக் கதைகள் அவர்களுக்கு தெரியாது. இல்லையெனில், நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்று சொல்வார்கள். மேலும், அந்த பாட்டி இன்னும் நிலவில் இருக்கிறார்கள், திரும்பி வரவே இல்லை என்றும் கூட கூறிவிடுவார்கள். அனுமன் தான் முதலில் நிலவுக்கு போனவர் என்று கதை சொல்லிக்கொண்டு இருக்க கூடியவர்கள், இந்த தமிழ்நாட்டில் தலைவராக இல்லை என்று பேசினார்.

விஜய் அரசியல் வருகை

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி.; விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கும் யாரும் அண்ணா, பெரியார் ஆகியோரின் வழியையும், அவர்களின் சிந்தனையையும் தவிர்த்து முடியாது என்று பேசினார்.

யார் பங்கேற்பு?

தொடர்ந்து, புத்தகக் காட்சி அரங்குகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டு, புத்தகத் தான பெட்டிக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+