கரூர் துயரம்: சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னால் சதி இருக்கிறது என்றும், எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மனுக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சிபிஐ விசாரணை கோரியும், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழு சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும், தவெக பதிவை ரத்து செய்ய வேண்டியும் மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறையினரின் போதுமான ஏற்பாடு இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பு இதனை மறுத்திருக்கிறது. காவல்துறையினர் தவறு என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு வாதங்களை முன்வைத்திருக்கிறது.
இதனையடுத்து காவல்துறைக்கு நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. "விஜய் பிரச்சாரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? கரூர் பிரச்சாரத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை போன்றை போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு" என்று கூறியிருக்கிறது.
மட்டுமல்லாது தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் நீதிமன்மறம் உத்தரவிட்டிருந்தது. அதேபோல சிபிஐ விசாரணை மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கக் கோரிய கே.கே. ரமேஷின் பொதுநல மனுவில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு விஜய் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் உத்தரவிட்டனர்.
அதேபோல வழக்கின் விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என்று கூடி பொதுநல மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.
முன்னதாக சிபிஐ விசாரணை கோரி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. எனவே அந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications