Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karur Stampede: கரூர் நெரிசல் சம்பவத்தில் சதியா? ‘அவன்’ குடும்பமே விளங்காது! ஆக்ரோஷமாக சாபம் விட்ட செல்லூர் ராஜு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சதி நடந்திருப்பதாக தவெக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என செல்லூர் ராஜு காட்டமாகக் கூறியுள்ளார்.

மதுரை மாடக்குளம் கண்மாயில் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கரையில் உள்ள மணலை அள்ளி வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் கரை பலம் இழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்," என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என விஜய் காணொலி வெளியிட்டுள்ளார். விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் அரசியலில் புதுமுகம்.

Karur Stampede

கரூர் கூட்ட நெரிசல்

ஆளாளுக்கு விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்துவிட்டார்கள். அவர்கள் நிர்வாகிகள் செய்தது. கேட்ட இடத்தைக் கொடுக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் வழிநெடுகக் கூடினார்கள். அப்போது அவரைப் பார்க்கக்கூடிய கூட்டம் கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால் கரூரில் பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர்தான் கூடினார்கள். அங்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது மனதிற்கு வருத்தத்தைத் தந்துள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேருந்தில் மாவட்டம் தோறும் செல்லாமல் தொகுதி வாரியாகச் செல்ல வேண்டும்.

விஜய் பிரச்சார மரணம்

இல்லையென்றால் மிகப்பெரிய இடங்களைத் தேர்வு செய்து திடல் போன்ற இடங்களில் முதல் கட்டப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது வயிற்றெரிச்சலைத் தருகிறது. இந்த நேரத்தில் விஜய்யை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன்னுடைய ஆதங்கத்தை காணொலியில் சொல்லியிருக்கிறார். அதைத்தான் அவர் சொல்ல முடியும்." என்றார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி சதி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு," சதி நடந்ததா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இதுபோன்று உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது. இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் தான் காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பைக் கையில் பிடித்து விளையாடக்கூடிய இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்கள் வீடியோவில் கதறுவதைப் பார்த்தோம்.

எடப்பாடி பழனிசாமி

கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தார்கள். அதேபோல தவெகவினர் இடம் கேட்டபோது உயிர்ப்பலி ஏற்படும் எனக் கூறி அந்த இடத்தைக் கொடுக்க மறுத்திருக்க வேண்டும். வேறு அகலமான இடத்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது.

போலீஸ் அலட்சியம்

விஜய்யால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். விஜய்க்கு அந்த இடத்தை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. விஜய் கேட்டதால் கொடுத்திருப்பதாகக் கூறுவது சப்பைக்கட்டு கட்டும் நோக்கம். சம்பவம் நடந்தவுடன் உடனுக்குடன் நீதியரசரை நியமித்துள்ளார்கள். அது எப்படி நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டு அவர் உடனடியாக ஆய்வு செய்கிறார். மக்களைச் சந்திக்கிறார். எல்லாத் தலைவரும் சொல்வதுதான். மக்களைச் சந்திப்பதுதான் தலைவர்களின் நோக்கம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+