அரசு ஊழியர்கள் இன்று ஆட்சிக்கு எதிராக.. கேஜி கேஜியாக "ஓஜி".. முருகன் கிட்டயே புலம்பிய நடிகை கஸ்தூரி
மதுரை: "தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப் பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன, கேட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது என்கிறார்கள் என்று காட்டமாக திமுக அரசை விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்கள், தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகையும் பாஜக கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளருமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் வந்தார்.

நடிகை கஸ்தூரி
சாமி தரிசனத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, "ஆண்டின் தொடக்கத்தை காசி விஸ்வநாதர் தரிசனத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.. தமிழக மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நல்ல காலமும், உண்மையான வெளிச்சமும் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டேன்.
திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படும் தீபம் போல, ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை..
"விடியல் தரப்போகிறார் என ஒருவரை சொன்னார்கள். திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் விடியல் தான் இன்னும் வரவில்லை. விடியல் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தவர்கள், அதை இன்னும் வராத நாளாக மாற்றிவிட்டார்கள்..
திருத்தணி ஜமால்
குடும்ப கஷ்டத்தின் காரணமாக வட இந்திய மாநிலங்களில் இருந்து பலர் தமிழகத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீது கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், திருத்தணியில் ஜமால் என்பவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்லாமிய முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது..
திருத்தணியில் நடைபெற்ற சம்பவம் ஒரு நாள் சம்பவம் கிடையாது.. பல்வேறு சம்பவங்கள் வெளியே வராமலேயே சென்று கொண்டிருக்கின்றன .. சமூக அமைதி பாதிக்கப்படும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன..
வடக்கன், பீடா வாயன்
திராவிட இயக்கத்தை தொடங்கும் போது பிராமண சமூகத்தை 'வந்தேறி' என்று சொன்னார்கள். அதன்பிறகு வட இந்தியர்களை குறிவைத்தார்கள். அதன் பிறகு 'பாஜக தமிழகத்திற்குள் வந்துவிடும், வந்துவிடும்' என்று பூச்சாண்டி காட்டினார்கள். இப்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை 'வடக்கன்', 'பீடா வாயன்' என அமைச்சர்களே பேசுகிறார்கள்...
"அவன் நம்ம ஆள் இல்லை என்ற விஷத்தை தமிழகத்தில் பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் இன்று வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கே மக்கள் பயப்படுகிறார்கள். தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை..
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.. தமிழகத்தின் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன. இதை கேட்டால் 'இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது' என்று சொல்கிறார்கள்..
கேஜி கேஜியாக ஓஜி
தமிழகத்தில் ஜீரோ சதவீதம் தான் கஞ்சா உள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் சொல்கிறார். ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயர்வகை 'ஓஜி' என்ற வகை கஞ்சா கிலோ கிலோவாக காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நமக்குத் தெரிந்தது எல்லாம் கேஜி தான். ஆனால் இப்போது கேஜி கேஜியாக 'ஓஜி' கஞ்சாவை பிடித்திருக்கிறார்கள்..
இதற்கு முன்பு யார் அந்த சார்?' என்று கேட்டபோது 'யாருமே இல்லை' என்று சொன்னார்கள். இப்போது 'எங்கே அந்த கஞ்சா?' என்று கேட்டால் 'எங்கேயும் இல்லை' என்று தான் சொல்வார்கள்..
ரஜினிகாந்த் என்ன சொல்ல போறாரு
திமுகவிற்கு வாக்களித்தவர்களே இன்று அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மதுவிலக்கு துறையில் மட்டும் போராட்டம் இல்லை. ஏனென்றால் அவர்களை மது போதையிலேயே அரசு வைத்துள்ளது..
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், 'கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என்று சொன்னார். அவர் இன்று என்ன சொல்வார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.. என் அப்பன் சுப்ரமணிய சுவாமி மட்டும் தான் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும் என்று நான் வந்துவிட்டேன்..
தமிழகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்து அச்சமாக உள்ளது.. அதனால் தான் கடவுளை பார்த்து கெஞ்ச போகிறேன்...
உதயநிதி ஸ்டாலின் ட்விஸ்ட்
ஜனநாயக கூட்டணி தலைமை கூறுவதை தமிழகத்தில் அதிமுக செயல்படுத்துவதாக உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பாஜக, அதிமுக இணக்கமாக செயல்படுவதை பார்த்து உதயநிதி பொறாமைப்படுகிறார். அவர் சொல்வதே பாராட்டுதான். ஆனால் அதை ட்விஸ்ட் செய்து சொல்கிறார். எல்லோரும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும் என்பதே அவரின் எண்ணம்.
உதயசூரியன் சின்னத்தை தாண்டி வேறு சின்னத்தை எண்ணி கூட பார்க்காத குடும்பத்தை சேர்ந்தவர் பூர்ண சந்திரன்.. ஆனால் அவரது உயிரிழப்புக்கு இதுவரை திமுகவினர் யாரும் இரங்கல் தெரிவிக்க வரவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications