சுந்தர்.சி கூத்தாடினா.. பிரகாஷ் ராஜ் யாரு? டெபாசிட்டே வாங்கலையே! பிடிஆரை விளாசிய நடிகை குஷ்பூ!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி-ஐ கூத்தாடி என விமர்சித்திருந்தார் திமுக வேட்பாளரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இந்நிலையில், எங்களை கூத்தாடி என்று சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார்? என நடிகையும் சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்த பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," குஷ்புவுக்கே சீட் கிடைக்காத போது, சுந்தர். சி.க்கு எப்படி சீட் கிடைத்தது என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் என் நண்பர் தான். அவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் என்னை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு திமுகவிலேயே பிறந்து வளர்ந்தவர்களா? கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் தேர்தலில் போட்டியிட்டு நின்று டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனார்.
நேரமிருந்தால் அவரை சிந்தித்து பார்க்கச் சொல்லுங்கள். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எங்களை விமர்சிக்கிறார். எங்களை கூத்தாடி என்று சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பப்ளிசிட்டிக்கு ஒரு கூத்தாடி தானே தேவைப்படுகிறார்? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் படிப்பை காட்டுகிறார்.
நாங்கள் என் வளர்ப்பை காட்டுகிறோம். நாங்கள் பரம்பரையாக அரசியல் செய்து கொண்டு மக்களை சந்திக்கவில்லை. எங்களை அடையாளப்படுத்தி தான் அரசியல் செய்து வருகிறோம். நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி பல பேரை படிக்க வைத்துள்ளோம். சுந்தர்.சி சீப் பப்ளிசிட்டி செய்பவர் கிடையாது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையரை மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை என்ற ராகுல் காந்தியின் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் மசோதாவை தாக்கல் செய்யவில்லை? பெண்களின் முதுகில் குத்துவதற்கு பதிலாக நெஞ்சில் குத்தியுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுக்காமல் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய இயலும்? ராகுல் காந்தி, திமுகவினர் படித்தும் முட்டாளாக இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகிறார்கள்" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications