கொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Recommended Video
மதுரை: நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் மற்றும் சிவகாளையில் ஜனவரி 15-ந் தேதி முதல் அகழாய்வுகள் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கீழடியில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை இன்று மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கொடுமணல், சிவகாளையில் ஜனவரி 15-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 3-வது கட்ட அகழாய்வு முடிவுகள் 2வாரங்களில் கிடைக்கும்.
கொந்தகையில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். ரூ12.2 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ஆதிச்சநல்லூரில் 7-வது கட்ட அகழாய்வுகள் நடத்தப்படுகிறது. தமிழக அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய தொல்துறை சிறப்பான ஒத்துழைப்பு வழங்குகிறது. இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications