சசிகலாதான் பொதுச் செயலாளர்.. "அதிமுக"வில் தீர்மானம்.. கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: "அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையில் கழகம் இயங்க வேண்டும்" என கோவில்பட்டி அதிமுக நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் இயங்க வேண்டும். சசிகலாவே அதிமுக பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

அதிமுக
சசிகலா அதிமுக தொண்டர்களிடம்
தொலைபேசி மூலம் உரையாடி வரும் சூழலில் தொண்டர்களை நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அடிப்படை விதிகள் மாற்று
கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா
நேற்றைய தினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுப்பீர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் உள்ளிட்ட 6 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆடியோவில் பேசி வரும் நிலையில் கோவில்பட்டி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications