நீதிபதியை தரம் தாழ்ந்து விமர்சிப்பது பாசிசம்.. இவ்வளவு கடுமை தேவையில்லை.. கிருஷ்ணசாமி பேட்டி
மதுரை: முருக கடவுள் தமிழ் மண்ணோடு சம்மந்தப்பட்ட விஷயம், திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதித்திருக்க வேண்டும் இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டிய அவசியமில்லை என மதுரையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் நீதிபதியை தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதுவும் ஒருவகையில் பாசிசம் தான் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு 2026 ஜனவரி 7ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான அனுமதி கோரி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதமாக தென் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாநாடு குறித்து பரப்புரை செய்கிறேன். இம்மாநாடு கட்சியின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இக்கட்சி 1997 டிசம்பர் 15ல் பதிவு செய்யப்பட்டது. 2026 சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்க போராடி, எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் தொடங்கினோம்.
2021ல் பெயர் மாற்றம் மட்டும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நடக்கக்கூடிய முதல் மாநில மாநாடு ஆகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தின் குடும்ப ஒருங்கிணைப்பு மாநாடாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் 50 ஆண்டுகால பின்னோக்கி தள்ளக்கூடிய மது ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கனிமவள கொள்ளை, மிதமிஞ்சி ஊழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். வேறு தீர்மானங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கட்சியின் அரசியல் திசையை குறிப்பிட்டு சொல்லும் வகையில் இம்மாநாடு அமையும். வைகை கரையில் உள்ள கிராம மக்கள் கூட குடிநீரை ரூ.20க்கு விலைக்கு வாங்கும் சூழல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் செய்வதில் பாகுபாடு காட்டப்படுகிறது. நுாறு நாள் வேலைத்திட்டம் ஒழிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கான மாநாடாக இருக்கும்.
நாங்கள் எந்த கட்சியுடனும் நிரந்தர பகையோ, நட்போ இல்லை. அனைத்து கட்சிகளையும் சம துாரத்தில் வைத்துதான் பார்க்கிறோம். தமிழக மக்களின் நலனே முக்கியம். இந்த ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு கூட்டணி முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு கட்சியும் தங்களை பலப்படுத்திக் கொள்ள சுதந்திர முடிவுகளை மேற்கொள்ளும். அதில் கருத்து கூற விரும்பவில்லை. வழிபாடு விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.
டிசம்பர் 3ல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. முருகு என்றால் அழகு என்று பொருள். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை பழநிக்கு சென்ற போது, தமிழகத்தில் ஒரே கடவுள் என்றால் முருகனாக இருக்கலாம் என கருத்து கூறினார்.
எனவே முருக கடவுள் தமிழ் மண்ணோடு சம்மந்தப்பட்ட விஷயம். அவ்வகையில், தீபத் துாணில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதித்திருக்க வேண்டும். இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு இதில் எவ்வித லாபமும் இல்லை. தீபத் துாணில் தீபம் ஏற்ற அனுமதித்திருந்தால் அன்றோடு இந்த செய்தி முடிந்திருக்கும். தனிப்பட்ட முறையில் தீபம் ஏற்ற முற்பட்டால் போலீசார் தடுக்க உரிமையுண்டு. ஆனால் நீதிமன்றம் உத்தரவுடன் சென்றவர்களை தடுத்துள்ளனர். அரசின் நிலைப்பாட்டால் போலீசாருக்கும், நீதிபதிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
சில வரலாற்று தவறுகளை ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் செய்ததெல்லாம் சரி என ஏற்றுக் கொள்ளக் கூடாது. தீபத் துாணில் தீபம் ஏற்றுவதில் எவ்வித தவறும் கிடையாது. அதில் முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அரசுக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாடு நடத்தியவர்கள் முருகன் மலையில் தீபம் ஏற்ற ஏன் தடுக்கின்றனர். சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் நீதிபதியை தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒருவகையில் பாசிசம் தான். திருப்பரங்குன்றம் விஷயத்தை மதத்தோடு பார்க்கவில்லை. மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ் உணர்வோடு, இயற்கை வழிபாட்டு முறையாக பார்க்கிறேன். முருக வழிபாடு தனி. அதை எந்த மதத்தோடும் சேர்த்து பார்க்கக்கூடாது" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications