மனைவியுடன் கள்ளக்காதல்.. உயிர் நண்பனே உயிரை எடுத்தார்.. மதுரையில் வழக்கறிஞர் கொலை
மதுரை: கள்ள காதல் விவகாரத்தில் வழக்கறிஞரை அவரது நண்பரே அடித்து கொன்று உடலை வைகையாற்றில் வீசிச் சென்றிருக்கிறார்கள். இதில் கொலையாளிகள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சாலை அருகே துவரிமான் வைகையாற்றங்கரையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் (எ) தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்
தகவல் அறிந்து அங்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை போலீசார் சாக்ரடீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மதுரை அரசு ராஜாஜி மருந்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்

கொலை வழக்கு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த சாக்ரடீஸ் (எ) தேவா மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கு சம்மந்தமாக மதுரை நீதிமன்றத்திற்கு ஆஜராக மதுரை வந்தபோது தனது நண்பரான செந்தில் என்பவர் மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்

அடித்துக்கொலை
இதில் மதுபோதையில் செந்தில் தனது மனைவியுடன் தகாத உறவில் சாக்ரடீஸ் இருந்ததை கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். உன்னால் தான் என் மனைவி நிரந்தரமாக என்னை விட்டு பிரிந்தார .இதற்கு நீ தான் காரணம் என கூறி சாக்ரடீசை அடித்து கொலை செய்திருக்கிறார் செந்தில். இதற்கு அவரது நண்பர் சையது ஜாபர் உடந்தையாக இருந்துள்ளார்.

விசாரணையில் அம்பலம்
இருவரும் இறந்த சாக்ரடீஸ் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று சோழவந்தான் சாலை துவரிமான் பகுதி வைகை ஆற்றங்கரையோரம் உடலை வீசிச் சென்றிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து செந்தில் மற்றும் சையது ஜாபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நண்பனே உயிரை எடுத்தது
கள்ள காதல் விவகாரத்தில் தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்ததால் வழக்கறிஞரான தனது நண்பனை உயிர் நண்பனே அடித்து கொலை செய்து உடலை வைகையாற்றங் கரையோரத்தில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications