எல்ஐசி அதிகாரியிடம் மதுரையில் சிக்கிய ஆவணங்கள்! இறுதி நொடியில் ரூமில் துடித்த பெண்.. வெளிவந்த நிஜம்
மதுரை: மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்தில் நடந்த சம்பவத்தின் உண்மை ஒவ்வொன்றாக வெளிந்தவண்ணம் உள்ளது.. கடைசி நிமிடத்தில் அலுவலகத்தில் என்ன நடந்தது? பெண் அதிகாரி தீயில் துடிதுடிக்கும்போது, துணை நிர்வாக அதிகாரி என்ன செய்தார்? இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள குற்றவாளியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சம்பவத்தின் பின்னணி என்ன?
மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17 அன்று இரவு 8.15 மணியளவில் பயங்கர தீ விபத்தில் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) உயிரிழந்தார்.

அப்போது அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ராம் (45) காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..
2வது மாடியில் இரவு 8 மணிக்கு எப்படி தீ பிடித்தது? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.. அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன்பு தன்னுடைய மகனுக்கு போன் செய்து பதற்றமாக பேசியதாக கூறப்பட்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது..
அடுத்தடுத்து வந்த சந்தேகம்
பிறகுதான் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். கல்யாணி நம்பி திருநெல்வேலியில் இருந்து மே மாதம் மதுரை எல்ஐசி கிளைக்கு பணி உயர்வு பெற்று வந்துள்ளார்.. இதே அலுவலகத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராம் என்பவர் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்,. ஆனால் நிறைய முறைகேடுகளில் ராம் ஈடுபட்டு வந்ததாகவும், சில ஆவணங்களில் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதை கல்யாணி நம்பி கண்டுபிடித்தும் உள்ளார். எனவே இதுதொடர்பாக, சில மாதங்களாக விசாரணை செய்து வந்தார்.
தீ விபத்து நிகழ்ந்த தினத்தன்று ராம் அலுவலகத்தில் சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தார். இதை கல்யாணி நம்பி பார்த்து அவரது மகனைத் தொடர்பு கொண்டு "போலீசுக்கு போன் பண்ணி வர சொல்" என்று சொல்லி உள்ளதர்.. இதனால் ராம் ஆத்திரமடைந்து பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றி கதவை பூட்டி வெளியேறினார்.
இந்த நேரத்தில் காயமடைந்த ராமின் காலுக்கும் தீப்பிடித்தது. தீ அலுவலகத்தின் 2வது தளத்திலும் பரவியது. இதனால் கல்யாணி நம்பி உடல் முழுதும் எரிந்து உயிரிழந்தார்.
கடைசி நிமிடம் - அதிர்ச்சி தகவல்
கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாராயணன் (25) தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதாக மதுரை திலகர் திடல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை தொடங்கி, அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் தீ விபத்துக்கான நேரத்தில் ராம் சந்தேகமாக இருந்தது தெரியவந்தது. ராம் சிகிச்சை பெற்று இருப்பதால் விசாரணை தாமதமாக நடைபெற்றது.
அப்போது போலீசார் விசாரணையில் ராம் அளித்த அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டது. விசாரணையில் ராம், ஆத்திரமடைந்தவாறு கல்யாணி நம்பியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக மற்றும் கதவை பூட்டி வெளியேறி ஓடியதாக கூறியுள்ளார். இதனால் கல்யாணி நம்பி வெளியேறி தப்பி ஓடிவர முடியாமல் ரூமுக்குள்ளேயே துடிதுடித்து கருகி இறந்தது தெரியவந்தது..
தீ விபத்தில் காயமடைந்த ராம் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் மாஜிஸ்திரேட் நேரடியாக விசாரணை நடத்த உள்ளார்.
குடும்பத்தினர் கோரிக்கை
இதுகுறித்து கல்யாணி நம்பியின் குடும்பத்தார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் காவல்துறைக்கு தேவையான தகவல்கள் வழங்கியுள்ளோம். பொதுவெளியில் எதுவும் கூறவில்லை. காவல்துறையில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். நீதியை நிச்சயமாக பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் கோரிக்கைகளுக்கு நடுவே, பொதுமக்களும் இதில் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்.. காரணம் உயிரிழந்த கல்யாணி நம்பி மிகவும் நேர்மையான அதிகாரியாம்.. அதனால்தான் புரமோஷன் பெற்று இந்த கிளை அலுவலகத்துக்கு வந்துள்ளார்... அநியாயமாக அவரது உயிரை பறித்துள்ளதால், பொதுமக்கள் கொந்தளித்து பேசுகிறார்கள்..
அலுவலகத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஆவணத்தில் குளறுபாடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.. இதையடுத்து, இச்சம்பவத்தின் பின்னணியில் அலுவலகத்தில் ஆவண முறைகேடுகள் தொடர்பான விசாரணையும் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications