மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்திரை திருவிழா.. அறிக்கை தர மதுரை கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் நாளில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலும் இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. வெற்றி வியூகம் வகுக்கும் ஸ்டாலின்.. இன்று முக்கிய அறிவிப்பு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. வெற்றி வியூகம் வகுக்கும் ஸ்டாலின்.. இன்று முக்கிய அறிவிப்பு

திருவிழா

திருவிழா

ஆண்டுதோறும் சித்திரை மாத பிறப்பையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 17 மற்றும் 19-ஆம் தேதி இத்திருவிழா நடைபெறுகிறது.

தேர்தல்

தேர்தல்

வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவர். இந்த நிலையில் 17, 19 ஆகிய தேதிகளுக்கு நடுவில் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்துக்கு நடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயலாத காரியம்

இயலாத காரியம்

திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வருகை தரவுள்ளதால் வெகு தூரத்தில் இருந்து வரும் மக்கள் 18-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் வந்து திருவிழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத காரியம்.

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் விடுமுறையையும் சேர்த்து கழிக்க வருவோர் இவ்வாறு அடிக்கடி சென்று வருவதை விரும்ப மாட்டார்கள். இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுவதால் வாக்குப் பதிவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என அரசியல் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

பள்ளித் தேர்வுகள், மத ரீதியிலான விழாக்கள் குறித்து அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பிறகே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ள நிலையில் மதுரை அழகர் திருவிழாவை எப்படி மறந்தனர். எனவே வேறு ஒரு தேதிக்கு மாற்றப்பட வேண்டும் என கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிச்சயம் நல்ல முடிவு

நிச்சயம் நல்ல முடிவு

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ கூறுகையில் மதுரை திருவிழா குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இது குறித்து நிச்சயம் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

விளக்கம்

விளக்கம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் நாளில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் நடராஜனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English summary
Tamilnadu Loksabha elections to be postponed to another date on the account of Kallazhagar temple function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X