சிபிஎம் பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளத்தில் இருந்து இஎம்எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு அகில பொதுச் செயலாளாரக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது.

இதில், கேரள முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 ஆவது பொதுச் செயலாளர் ஆவார்.
கடந்த ஆண்டு சீதாராம் யெச்சூரி இறந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதைத்டொர்ந்து, பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்வு நடத்தப்பட்டு, எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டில், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்!












Click it and Unblock the Notifications