பேட் கேர்ள் டீசரை பார்க்க சகிக்கலை..அத்தனை வக்கிரம்! வெற்றிமாறன் மீது போக்சோ கேஸ்..கோர்ட்டில் வழக்கு
மதுரை: சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாக பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் டீசரை வெளியிட்டனர்.
பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாக பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்டது. மதுரை வெங்கடேஷ் , ரமேஷ் குமார் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்," 26.01.2025 ,அன்று யூடியூப் இணையத் தில் பேட் கேர்ள் என்ற திரைபடத்தின் டீசர் வெளியானது.இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன் லைனில் உள்ளது.
இது போன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகும். இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் சிறுவர் சிறுமியர் பாலியல் காட்சிகளை வெளியிட்ட கூகுள் நிறுவனம் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவதற்கு, யாருக்கு உத்தரவிட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் தனிப்பட்ட புகார் ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் , தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. எனவே ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற்கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என கூறினார். இதை தொடர்ந்து , மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. எனவே,வழக்கு விசாரணையை வருகிற 20 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications