தடை செய்யப்பட்ட பிறகும் விளையாடப்படும் 'ஃப்ரீஃபயர்'.. எப்படி சாத்தியம்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
மதுரை: "ஃப்ரீஃபயர் விளையாட்டை தடை செய்ததற்கு பிறகும், அதை எப்படி இளம் தலைமுறையினர் விளையாடி வருகின்றனர்? ஆன்லைனில் அது எவ்வாறு கிடைக்கிறது?" என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
ஆட்கொணர்வு மனு ஒன்றை விசாரித்த நீதிபதி, இந்தக் கேள்வியை எழுப்பினார். மேலும், தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கும் சூழலில், நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை
கொரோனா ஊரடங்கால் பள்ளி - கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் வகுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்கள் கையில் ஸ்மார்ட்ஃபோன் கிடைத்ததால் அவர்கள் அதில் உள்ள பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகினர். இதனிடையே, பப்ஜி, ஃப்ரீஃபயர் போன்ற விளையாட்டுகள் இளைஞர்களை அடிமையாக்குவதுடன், அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், இந்த விளையாட்டுகள் வன்முறை எண்ணங்களை சிறு பிள்ளைகள் மனதில் விதைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

தடை விதித்த அரசு
இந்த பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கும் வேளையில், லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டது. இதையடுத்து, சீனாவுக்கு சொந்தமான பல ஆன்லைன் செயலிகள், விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அவற்றில் பப்ஜி, ஃப்ரீஃபயர் உள்ளிட்ட கேம்களும் அடக்கம். இதனால் இந்த ஆன்லைன் விளையாட்டுகளை இந்தியாவில் விளையாட முடியாது என்ற சூழல் உருவானது.

ஆட்கொணர்வு மனு
இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஓர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. அவர் பப்ஜி, ஃப்ரீஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண் நண்பர்கள் அறிமுகமாகினர். அவர்களில் யாராவதுதான் எனது மகளை கடத்தியிருக்க வேண்டும். எனது மகளை மீட்டுத் தர போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஃப்ரீஃபயர் கிடைப்பது எப்படி? நீதிபதி கேள்வி
இந்த மனுவானது, நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த பின்னர் நீதிபதி கூறியதாவது:
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, ஃப்ரீஃபயர் போன்றவை தடை செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. ஆனாலும், இளம் தலைமுறையினர் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தடை செய்யப்பட்ட ஃப்ரீஃபயர் விளையாட்டு ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை முழுமையாக அமல்படுத்துவது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications