டிவி சீரியல்களுக்கு சிக்கல்? சின்னத்திரை தணிக்கை வாரியம் கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் ஆரோக்கியமானவையாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, விவாகரத்து செய்வது, பழிவாங்கும் காட்சிகள்தான் அதிகமாக வருகின்றன. இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றன. எனவே டி.வி. தொடர்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுவழக்கு தொடரப்பட்டுள்ளது.இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் முன்பு சினிமாக்கள் தான் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.இப்போது சீரியல்கள் மற்றும் அதில் வரும் கேரக்டர்கள், காட்சி அமைப்புகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சீரியலில் ப்ரோமோ எப்போது வரும் என்று காத்திருந்து பார்க்கும் மக்கள் மிகஅதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓடும் சீரியலில் மாமியார்- மருமகள், கள்ளக்காதல், அடுத்தவரின் கணவருக்கு ஆசைப்படுவது, எப்படி மோசமாக பழிவாங்குவது என்று மிகவும் வில்லத்தனமாக இருக்கும். இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், சென்னை தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "இந்தியா, நாகரிகம் மற்றும் கலாசாரம் மிகுந்த நாடு ஆகும். தமிழ்நாட்டு குடும்பங்களில் தவிர்க்க முடியாத இடத்தை டி.வி.க்கள் பிடித்து உள்ளன. பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், இளைஞர்களிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கவர்ச்சிகரமான ஆடைகளுடன் தோன்றுதல், ஆபாச காட்சிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
அதேபோல் தொலைக்காட்சி தொடர்களும் ஆரோக்கியமானவையாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவது போன்ற காட்சிகள்தான் அதிகமாக வருகின்றன. இது பார்வையாளர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுவதாக அமைகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் வரும் காட்சிகள் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிகின்றன.
சில நிகழ்ச்சிகள், வக்கிரமான, வன்முறைகளை காட்சிப்படுத்துகின்றன. கேளிக்கை என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்துவதை ஏற்க இயலாது. எனவே டி.வி. தொடர்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் சின்னத்திரை வாரியத்திடம் சான்றிதழ் பெற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உறுதிப்படுத்த வேண்டும்.. மீறினால் கடும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications