மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழக்க தோஷத்தில் வணக்கம் போட்ட ராஜ் சத்யன்.. மதுரையில் மீண்டும் பஞ்சாயத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் வேட்பாளர் ராஜ்சத்யன் பங்கேற்றார்.

Google Oneindia Tamil News

மதுரை: ராஜ்சத்யனுக்கு எங்க போனாலும் வணக்கம் வெக்கறதே வேலை போல இருக்கு.. பழக்கதோஷத்தில் வணக்கம் வைக்க போய்.. திரும்பவும் ஒரு சர்ச்சையில் சிக்க உள்ளார்!

மதுரையில் இன்று மீனாட்சி கோயிலில் விசேஷம்! மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இநத் கல்யாணத்தை காண ஆயிரக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

 Madurai ADMK Candidate Raj sathyan in again Controversy

அப்போது, விழாவில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் வந்திருந்தார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட ஏராளமான அதிமுகவினரும் கோயிலுக்கு வந்தனர். அப்போது ராஜ்சத்யன் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கும்பிட்டு கொண்டே சென்றார்.

இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. பிரச்சாரம் முடிந்து எந்த வேட்பாளரும் பொதுமக்களை பார்த்து கும்பிட்டு செல்ல கூடாது. இதுவும் விதிமீறல்தான். ஒருவேளை யதேச்சையாக வணக்கம் வைத்திருந்தால், மதம் சார்ந்த நிகழ்வுகளில் இப்படி செய்யக்கூடாது என்கிறது தேர்தல் விதி!

சோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல் சோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

இதை ராஜ்சத்யன் வேண்டுமென்றே செய்திருக்க முடியாது. யதேச்சையாக தன்னையும் அறியாமல்தான் பொதுமக்களை பார்த்ததும் கை தானாகவே வணக்கம் வைக்க போய்விட்டது.

இப்படித்தான் போன வாரம் மதுரையில் தபால் வாக்குபதிவு நடக்கும்போது காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களிடமே ராஜ் சத்யன் வணக்கம் வைத்து வாக்கு கேட்டார். இது சம்பந்தமான புகாரும் கலெக்டருக்கு சென்று சர்ச்சையானது. இப்போது அடுத்த சர்ச்சையும் எழுந்துள்ளது!

English summary
ADMK Madurai Candidate Raj sathyan participated in Meenatchi amman temple Thirukkalyanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X