ரோபோவுக்கு ஒரு பக்ஷிராஜன்.. மதுரைக்கு ஒரு அருண்.. சிட்டுக்குருவிக்காக பைக்கை வீடாக்கிய நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிட்டுகுருவிக்காக மூன்று மாதம் தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்கும் வழக்கறிஞரின் தயாளகுணத்தையும் இயற்கை மீதான பற்றையும் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

செல்போன் டவர்களாலும் செல்போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சுகளாலும் பறவை இனங்கள் அழிவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வாகன சப்தம் உள்ளிட்ட காரணங்களால் இன்று கிராமப்புறங்களிலும் பாரம்பரியமான பறவைகளான மணிப்புறா, சிட்டுக்குருவி, தவுட்டுக்குருவி, மரக்கொத்தி, கிளி உள்ளிட்டவை காணப்படுவதில்லை.

மேலும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவைகளாலும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யாமல் குறைந்த அளவில் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

ரோபோ 2.ஓ

ரோபோ 2.ஓ

இதுகுறித்து ரஜினிகாந்த் நடித்த ரோபோ 2.ஓவில் குருவிகளுக்காகவே வாழ்ந்து அவைகளுக்காகவே இறந்த பக்ஷிராஜனின் மெனக்கெடல்கள் என கதை நகரும். இதில் விஸ்வரூபம் எடுக்கும் பக்ஷிராஜன் செல்போன்களை பறித்து யாரெல்லாம் செல்போன் டவர் அமைத்து குருவிகள் இறக்க காரணமாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் பழிவாங்குவார்.

செல்போன்

செல்போன்

இந்த நவீன உலகில் செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமல்ல. ஆனால் ஒரு பறவையோ அழிந்து வரும் இனமோ நம்மை நாடி வந்தால் அதற்கான உதவிகளை செய்து அந்த இனத்தை காக்க வேண்டும். இப்படித்தான் மதுரையில் ஒரு வழக்கறிஞரின் மனைவி செய்து வருகிறார்.

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

ஆம், அழிந்து வரும் ஒரு இனமான சிட்டுக்குருவிக்காக தனது இரு சக்கர வாகனத்தை 3 மாதங்களாக எடுக்காமல் அந்த குருவி குஞ்சு பொரிக்க வழி ஏற்படுத்தியுள்ளார். மதுரை உலகநெறி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

ஊரடங்கு

ஊரடங்கு

கொரானா தொற்று ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் செயல்படாததால் வீட்டில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில் மே மாதம் இவரது மனைவி இந்துவின் இரு சக்கர வாகனத்தில் சிட்டு குருவி கூடு கட்டி உள்ளது. இதனை அவரது குழந்தை பார்த்து சொல்லியது. இயற்கையின் மீதும் சிட்டுக்குருவி இனத்தின் மீதும் ஆர்வம் கொண்ட வழக்கறிஞர் குடும்பம் அந்த கூட்டை கலைக்க மனமில்லை.

நகர்த்த மாட்டோம்

நகர்த்த மாட்டோம்

இதனால் மிகவும் பாதுகாப்பாக அதே இடத்தில் வைத்திருந்தனர். தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு இரு தினங்களுக்கு முன் குஞ்சு பொரித்து உள்ளது. சிட்டுக்குருவி குஞ்சு பொரித்து தானாக பறந்து செல்லும் வரை தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த போவதில்லை என்று அவரது மனைவி இந்து தெரிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மேலும் இரு சக்கர வாகனம் இல்லாமல் எப்போதும் கணவரின் புல்லட்டையே நம்பி இருப்பது சிரமம்தான். இருந்தாலும் சிட்டுக்குருவி குஞ்சு பொரித்தது எங்களுக்கு மகிழ்ச்சி. எனவே சிறு சிரமத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டு சிட்டுக்குருவி பறந்து செல்லும் வரையிலும் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க போவதில்லை என்றார்.

Recommended Video

    மதுரை முழுக்க பறந்து வரும் சிறிய ரக விமானங்கள்.. ஆச்சர்யப்படும் மக்கள்... சூப்பர் முயற்சி
    பாராட்டு

    பாராட்டு

    சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் சூழ்நிலையில் இன விருத்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை மூன்று மாதங்களாக இருந்த இடத்தை விட்டு நகராமல் சீட்டு குருவியின் வீடாக மாற்றி பாதுகாத்து வருவதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவது வீண் போகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+