வியந்த மதுரை.. அந்த "தட்டுல" பார்த்தீங்களா? ஆமா, எடப்பாடிக்கு இந்த விஷயம் தெரியுமா? வேற லெவல் அதிமுக
மதுரை: மதுரையில் விரைவில் அதிமுக மாநாடு நடக்க போகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், முக்கிய சம்பவம் ஒன்று பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
தக்காளியின் விலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டதால், பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தக்காளி விலை: சில நாட்களுக்கு முன்புவரை, இந்தியாவில் பல இடங்களில் கிலோ ரூ.200யை கடந்தது. தமிழ்நாட்டில் ரூ.150யை தாண்டி ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. தக்காளி சாகுபடியின் பரப்பளவு குறைந்ததும், அளவுக்கு அதிகமான வெப்பத்தால் தக்காளி உற்பத்தி சரிந்ததும், மழை வெள்ளத்தில் தக்காளி அழிந்ததும் தான், இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டன.

தக்காளி பழம் தமிழக மக்களுக்கு பரவலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரேஷனில் தக்காளி வழங்கப்படுகிறது. ஆனாலும், அனைவருக்கும் கிடைப்பதில்லை. காலையிலேயே தக்காளி வாங்குவதற்கு ரேஷனில் போய் வரிசையில் நின்றுவிடுவதால், பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல் தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள்.
செல்லூர் ராஜூ: இதற்குதான், நம்முடைய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு ஐடியா சொன்னார்.. ரேஷனில் தக்காளியை விற்பதைவிட, பேசாமல் தெருத்தெருவாக கொண்டுபோய் விற்றுவிட்டு வரலாம்.. அப்போதுதான் எல்லாருக்கும் கிடைக்கும் என்று கூறினார்.
இந்த தக்காளியில் நிறைய விநோத சம்பவங்களும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.. சில நாட்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், தன் மகளுக்கு ஆடி மாதம் சீர் செய்து, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தார். அப்போது பிறந்தவீட்டு சீர் வரிசை தட்டுகளில், ஆப்பிள், அன்னாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றுடன் தக்காளி பழத்தையும் ஒரு தட்டில் வைத்திருந்தனர். சீர்வரிசை தட்டில் தக்காளி இடம்பெற்றிருந்தது காண்போரை ஆச்சரியப்படுத்தியது.
அதிமுக மாநாடு: இதோ இப்போது இதே போன்ற சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.. அதிமுக மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது..
இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அந்த தாம்பூலத்தட்டில் வெற்றிலை பாக்குடன், தக்காளி பழங்களை வைத்திருந்தனர்.. இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
ஆச்சரியம்: பொதுவாக அழைப்பிதழ் தந்தால், அந்த தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை பழங்கள் வைத்து தருவது வழக்கம்.. ஆனால், தக்காளியை வைத்து தந்ததுமே, காண்போருக்கு ஆச்சரியம் தந்தது.. அதாவது, ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி தரப்பட்டது.. இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியதுதான் இதில் ஹைலைட்டே...!!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications