மண்ணெண்ணெய் கேனோடு மேலே ஏறி.. பரபரப்பு! போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள்!
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் 1 வாரம் அவகாசம் அளித்த நிலையில், மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சுமார் 633.17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அந்த நிலத்தின் பகுதிகளில் சின்ன உடைப்பு கிராம பகுதிகளுக்கு உட்பட்ட நிலங்களும் உள்ளன. விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் வந்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் இன்று காலை 1000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மீது மண்ணெண்ணெய் கேன்களோடு ஏறிய மக்கள் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடர்ந்தால் தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தனர்.

மேலும், ஏராளமான பெண்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சிலர் மயக்கமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில், "கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, அதன் உரிமையாளரிடம் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கூடுதல் இழப்பீடு மற்றும் நிலம் கேட்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு மட்டுமே வழங்கப்படும். இருந்தும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம பகுதியில் நிலம் வழங்குகிறோம் என கூறியுள்ளோம். மேலும் வீடுகளை காலி செய்ய ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளோம். இதனால், தற்போது அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications