அரசு கிப்ட் + சிவப்பு நிற கார்.. கிறங்கும் கீழக்கரை.. திமில் பிடித்து திமிர் காட்டும் மதுரை வீரர்கள்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மதுரை வந்தார்.. காலை 10.,30 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை, முதல்வர் திறந்து வைத்ததுமே, ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிய மைதானத்தில் நடைபெற போகின்றன..
கார் பரிசு: இந்தப் போட்டி தமிழக அரசு சார்பில் நடக்கும் நிலையில், வெற்றிபெறும் வீரர் மற்றும் காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடிக்கும் காளைக்கு, கார் பரிசுடன் ஒரு லட்ச ரூபாய், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு காருடன் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. ரொக்கப் பரிசுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கார்களை முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் வழங்க உள்ளனர்.
2வது இடம் பிடிக்கும் காளைக்கு ரூ.75 ஆயிரம், 3வது இடம் பிடிக்கும் காளைக்கு ரூ.50 ஆயிரம் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இரண்டாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ. 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாமிடம் வீரருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்படும்.. இந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications