மதுரை துள்ளுது.. பார்க்கறதுக்கு "ஸ்டேடியம்" மாதிரியே.. ஈர்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை, நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. இதற்கான ஏற்பாடுகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் மும்முரமாகி உள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர்பெற்றது மதுரை மாவட்டம். அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால், உலகபிரசித்தி பெற்றது.

காலரிகள்: இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருவதை பார்ப்பதற்கென்றே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வருடா வருடம் கூடுவது வழக்கமாகும்.
ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கென்று தனியாக இடம் எதுவும் இல்லை.. எப்போதுமே ஊருக்குள்ளேயே இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதனால், வாடிவாசல் அருகேயுள்ள காலரிகளில் அமர்ந்து, விஐபிக்கள் நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.. ஆனால், பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு போட்டிகளை காண்பது எளிதாக இருப்பதில்லை.
ஜல்லிக்கட்டு: இந்த பிரச்சனைக்குதான், ஒரு முடிவு கட்ட நினைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஜல்லிக்கட்டை எல்லாருமே ஒன்றுசேர்ந்து கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேகமான ஜல்லிக்கட்டு விளையாட்டுத்திடல் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்தார்.. இதையடுத்து, கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில், ரூ.44 கோடி மதிப்பில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு கட்டப்பட்டுள்ளது..
இந்த மைதானத்தில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்கார்ந்து போட்டிகளை பார்க்கலாம். நிறைய வசதிகள் கொண்டு இந்த மைதானம் கட்டப்பட்டிருக்கிறது.. பார்ப்பதற்கு, அப்படியே கிரிக்கெட் ஸ்டேடியம் போலவே இருக்கிறது..
பெயர் சூட்டல்: இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த அரங்கத்தை நாளை 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்..
வாடிவாசல்: முக்கியமாக, ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகள், பார்வையாளர் மாடம், காளைகள் சென்று சேரும் இடம், பொதுமக்கள் அமரும் இடம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.. நாளையே இந்த மைதானம் திறக்கப்போவதால், மதுரை மக்கள் பெரும குஷியில் காணப்படுகின்றனர்..!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications