'தொடர்ந்து 25 முறை'.. அமமுக பிரமுகரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, கல்லை போட்டு பயங்கரமாக கொன்ற மனைவி
மதுரை: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், அ.ம.மு.க. பிரமுகரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதுடன், கல்லையும் தூக்கிப்போட்டுவிட்டு, அரிவாளால் பல முறை வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் அவரது மனைவி.இந்த பயங்கர சம்பவம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கிராமம் தனக்கன்குளம். இங்குள்ள திருவள்ளுவர்நகரை சேர்ந்த 51 வயதாகும் சர்க்கரை என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
சர்க்கரைக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அ.ம.மு.க.வில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார்.

வலியால் அலறினார்
இந்தநிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. சனிக்கிழமை இரவில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் சர்க்கரை தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அன்னலட்சுமி ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து வந்து சர்க்கரை மீது ஊற்றினாராம். இதனால் வலியால் அவர் அலறி துடித்து அலறியிருக்கிறார்.

படுகாயம்
அந்த நேரத்தில் சர்க்கரை எழுந்து ஓடிவிடாமல் இருக்க அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி வந்து சர்க்கரையின் தலையில் அன்னலட்சுமி போட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து கிடந்த அவரை அன்னலட்சுமி அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சர்க்கரை, கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னலட்சுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மதுரை போலீஸ்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்கள். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்க்கரையின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய அன்னலட்சுமி
அமமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல்
நடந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது, அமமுக பிரமுகர் சர்க்கரைக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். கள்ளக்காதலை கைவிடும்படி அன்னலட்சுமி வற்புறுத்தி வந்ததால், கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில்தான் கணவரை அவர் கொடூரமாக கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது. கணவரை அவர் அரிவாளால் வெட்டும் காட்சியும், தப்பி ஓடும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தப்பி ஓடிய அன்னலட்சுமியை கைது செய்த பின்புதான் கொலைக்கான முழு பின்னணி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications