முறுக்கு விற்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்ன உணவு விற்பனை கூடமா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எதற்காக முறுக்கு உள்ளிட்ட உணவு பொருட்களை விற்கிறீர்கள். அது கோயில் வளாகமாக இல்லை உணவு விற்பனை கூடமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரியும், கோயிலில் புனரமைப்பு பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரியும் சேலம் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை சார்பில் மீனாட்சி அம்மன் கோயில், உப கோயில்களின் சொத்துகள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அளிக்கப்பட்ட சொத்து விவரமும் வருவாய் துறை அளித்த சொத்து விவரமும் பொருந்தவில்லை என நீதிபதிகள் கூறி ஏற்க மறுத்தனர். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி உறுதி செய்ய வேண்டும் என்றும் நவம்பர் 22 ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே கிரானைட் கற்கள் புதிதாக பதிக்கப்படுவதாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், பழமையான கோயில்களில் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு அது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு நவம்பர் 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
கோயிலில் வணிக நோக்கில் பக்தர்களுக்கு அப்பம், முறுக்கு தயாரிக்கப்பட்டு பிரசாதம் என கூறி விற்பனை செய்வது ஏன்? இது கோயில் வளாகமா இல்லை உணவு விற்பனை கூடமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications